RCB vs RR:பெங்களூருவில் இடைவிடாத மழை... பெங்களூரு Vs ராஜஸ்தான் போட்டி தாமதம்.. ரசிகர்கள் கவலை
பெங்களூரு:பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் மழையால் திடீரென தடைபட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 49 வது போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்து வீச முடிவு செய்தார்.

ஆனால், பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பலத்த மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக போட்டி இதுவரை தொடங்கப்படவில்லை.
மழை நீடித்தால் இந்த போட்டி கைவிடப்படலாம் என்று தெரிகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் இருக்கிறது. எனவே அடுத்தடுத்து 2 போட்டிகளில் நல்ல ரன்ரேட் விகிதத்தில் வென்றால் ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு இருக்கிறது.
ஆனால்... மழையால் போட்டி எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை. இந்த போட்டி நடக்கவில்லை என்றால் ராஜஸ்தான் அணிக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால் அந்த அணியின் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications