For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி மட்டுமல்ல ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க ஜாம்பவான்கள் உள்ளிட்ட 7 பேருக்கு ICC Hall of Fame கவுரவம்

லண்டன்: சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்த ஏழு கிரிக்கெட் வீரர் வீராங்கனைகளுக்கு ஹால் ஆஃப் ஃபேம் கௌரவத்தை ஐசிசி வழங்கி இருக்கிறது. லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த கிவுரவம் வழங்கப்பட்டது. இதில் தோனியை தவிர மற்ற 6 பேரும் பங்கேற்று இருந்தனர்.

இந்த விருதில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் மேத்யூ ஹைடனுக்கு ஹால் ஆப் பேம் கௌரவம் கிடைத்திருக்கிறது.103 டெஸ்ட் போட்டிகளில் 8625 ரன்களும், 161 நாள் போட்டிகளில் 6133 ரன்களும், ஒன்பது டி20 போட்டிகளில் 308 ரன்களும அடித்திருக்கிறார்.

ICC Hall of fame

அது மட்டும் இல்லாமல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 சதம் அடித்து உள்ள ஹைடன் 2007 உலக கோப்பையில் மூன்று சதம் அடித்துள்ளார். இதேபோன்று தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் ஹசிம் அம்லாவுக்கும் இந்த கவுரவம் வழங்கப்படுகிறது. 124 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 9282 ரன்கள் அடித்துள்ள அவர் 181 நாள் போட்டிகளில் விளையாடி 8113 ரன்கள் அடித்துள்ளார்.

மொத்தம் சர்வதேச கிரிக்கெட்டில் 55 சதம் அடித்துள்ள அம்லா, இங்கிலாந்துக்கு எதிராக 2012 ஆம் ஆண்டு 311 ரன்கள் விளாசி இருக்கிறார். அதேபோன்று தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் மாபெரும் கேப்டனாக விளங்கிய கிரேம் ஸ்மித்துக்கு இந்த கவுரவம் வழங்கப்பட்டிருக்கிறது. 22 வயதில் கேப்டன் பொறுப்பை ஏற்ற அவர் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். மேலும் பேட்டிங்கிலும் 117 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9265 ரன்களும் 1971 நாள் போட்டிகளின் விளையாடி 6989 ரன்களும் அடித்து இருக்கின்றார்.

அதேபோன்று நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ஆல் ரவுண்டர் விட்டோரிக்கும் இந்த கவுரவம் கிடைத்திருக்கிறது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என பல்வேறு சாதனைகளை படைத்திருக்கின்றார். இதை போன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனை சானா மிர் ஹால் ஆப் பேம் கௌரவத்தை பெற்றிருக்கிறார். இதன் மூலம் இந்த கௌரவத்தை பெறும் முதல் பாகிஸ்தான் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை சாரா டைலருக்கும் இந்த கௌரவம் கிடைத்திருக்கிறது.

Story first published: Monday, June 9, 2025, 23:58 [IST]
Other articles published on Jun 9, 2025
English summary
Mathew Hayden and Hashim amala also inducted in ICC Hall of fame
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+