Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி.. 15 பேரை தேர்வு செய்த மேத்தீவ் ஹைடன்.. முக்கிய வீரர் இல்லை

மும்பை : உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 38 நாட்களே உள்ளது. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் அனைத்து நாடுகளும் தங்களது அணியை அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்துள்ளது.

இந்த நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வீரர்கள் விளையாட உள்ளனர். அதில் யார் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்த்து தான் உலக கோப்பை அணி தேர்வு செய்யப்படும்.

Mathew Hayden picks 15 member india squad for icc world cup 2023

இந்த சமயத்தில் முன்னணி வீரர்கள் பலர் இந்திய அணி எப்படி இருக்கும் என்று தேர்வு செய்திருக்கிறார்கள். அதில் தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மேத்யூ ஹைடன், ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்திருக்கிறார். அதில் யார் என்று தற்போது பார்க்கலாம். மேத்யூ ஹைடன் தேர்வு செய்துள்ள அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும் சுப்மன் கில்லும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

நடுவரிசையில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தன்னுடைய அணியில் மூன்று விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்திருக்கிறார். அதில் சஞ்சு சாம்சன், கே.எல். ராகுல், இசான் கிஷன் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். கீழ் வரிசையில் சூரிய குமார் யாதவ் மற்றும் ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா ஹர்திக் பாண்டியா ஆகியோரை தனது அணியில் ஹைடன் தேர்வு செய்திருக்கிறார்.

வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முகமது சமி,ஷர்துல் தாக்கூர்,பும்ரா முகமது சிராஜ் என நான்கு வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் கூடுதல் சுழற் பந்துவீச்சாளராகவும் அக்சர் பட்டேலை ஹைடன் தேர்வு செய்துள்ளார். இந்த நிலையில் ஹைடன் தேர்வு செய்துள்ள அணி சிறப்பாக இருந்தாலும், வெறும் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் மட்டும்தான் அணியில் இருப்பது குறையாக பார்க்கப்படுகிறது.

இந்த அணியில் சர்துல் தாக்கூருக்கு அல்லது சஞ்சு சாம்சனுக்கு பதில் குல்தீப் சேர்க்கப்பட்டால் அது சிறப்பான அணியாக இருக்கும். தேர்வு செய்த இந்த 15 பேர் கொண்ட அணியில் கிட்டத்தட்ட 13 இல் இருந்து 14 வீரர்கள் உலகக்கோப்பை அணியில் நிச்சயம் இடம்பெறுவார்கள். ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் தான் மாற்றப்படுவார்கள என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைடன் இந்திய அணி : 1, ரோகித் சர்மா, 2, சுப்மன் கில், 3, விராட் கோலி, 4, ஸ்ரேயாஸ் ஐயர், 5, சஞ்சு சாம்சன், 6, கேஎல் ராகுல், 7, சூர்யகுமார் யாதவ், 8, ஜடேஜா, 8, ஹர்திக் பாண்டியா, 10, இஷான் கிஷன், 11, பும்ரா, 12, முகமது ஷமி, 13, முகமது சிராஜ், 14, ஷர்துல் தாக்கூர், 15, அக்சர் பட்டேல்

Story first published: Sunday, August 27, 2023, 9:00 [IST]
Other articles published on Aug 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+