மும்பை : ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு தொடரில் சிறந்து விளங்கிய வீரர்களை பிளேயிங் லெவனில் தேர்வு செய்யும் நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது. ரசிகர்களுக்கு இரண்டு மாதமாக நல்ல பொழுதுபோக்காக அமைந்த ஐபிஎல் தொடர் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது.
இதனால் இரவு 7 மணி ஆனவுடன் ரசிகர்களின் கண்கள் ஜியோ சினிமா மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தேடி செல்கிறது. ரசிகர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருக்கும் ஐபிஎல் நடந்து முடிந்த சீசனில் சிறந்து விளங்கிய வீரர்களை தற்போது ஹைடன் தேர்வு செய்துள்ளார்.

அதில் யாருக்கு எந்த இடம் கிடைத்திருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். நடப்பு ஐபிஎல் தொடரில் சிறந்த அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் ஆகியோரை தேர்வு செய்திருக்கிறார். இந்த நிலையில் மூன்றாவது வீரராக ஆர் சி பி அணியின் கேப்டன் டுபிளசிசை ஹைடன் தேர்வு செய்திருக்கிறார்.
இதேபோன்று நடு வரிசையில் மும்பை இந்தியன்ஸ் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவையும், ஐந்தாவது இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் கேமிரான் கிரீனையும் ஹைடன் தனது அணியில் தேர்வு செய்து இருக்கிறார்.
இதைப் போன்று ஆறாவது வீரராக ரவீந்திர ஜடேஜாவையும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனியையும் ஹைடன் குறிப்பிட்டு இருக்கிறார். இதேபோன்று எட்டாவது வீரராக சுழற் பந்துவீச்சாளர் ரசித் கானையும் ஒன்பதாவது வீரராக சுழற் பந்துவீச்சாளர் நூர் அகமதையும் ஹைடன் குறிப்பிட்டு இருக்கிறார். இதை போன்று இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முகமது சமி மற்றும் மோகித் சர்மா ஆகியோரை ஹைடன் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஒட்டுமொத்த பந்துவீச்சாளர்களையும் குஜராத் அணியினராகவே ஹைடன் தேர்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஹைடன் அணியில் விராட் கோலி ஏன் இடம்பெறவில்லை என்று ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர். விராட் கோலி தான் தொடக்க வீரர் அல்லது மூன்றாவது வீரராக இருந்திருக்க வேண்டும் என்றும் இந்த அணியை தாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் அவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.