For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“தினேஷ் கார்த்திக் எதுக்கு டீம்ல இருக்காரு?” ரோகித் செய்யும் தவறு.. முன்னாள் வீரர்கள் சரமாரி கேள்வி

நாக்பூர்: இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் எதற்கு இருக்கிறார் என்றே புரியவில்லை என முன்னாள் வீரர் அஜித் அகர்கர் கேட்டுள்ளார்.

Recommended Video

T20 WorldCup | Bhuvneshwar Kumarக்கு Death Bowling Skills இருக்கு! - Mathew Hayden *Cricket

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.

முதல் டி20ல் தோல்வியடைந்ததால் 2வது டி20க்கான ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்ய ரோகித் சர்மா தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

 2வது டி20 போட்டி

2வது டி20 போட்டி

இந்திய அணியில் எத்தனை தவறுகள் நடந்தாலும், தினேஷ் கார்த்திக் குறித்த பேச்சு மட்டும் அடங்க மறுத்துதான் இருக்கிறது. ஃபினிஷர் என்ற பதவியை அவருக்கு கொடுத்துவிட்டதால் ரிஷப் பண்ட் வெளியே உட்காரவைக்கப்பட்டார். இப்படி இருக்கையில் அவருக்கு சரிவர வாய்ப்பு தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.

வாய்ப்பே இல்லை

வாய்ப்பே இல்லை

ஆஸ்திரேலியாவுடனான முதல் டி20ல் 126 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்களை இழந்துவிட்ட போது தினேஷ் கார்த்திக் களமிறக்கப்படவில்லை. மாறாக ஆல்ரவுண்டர் அக்‌ஷர் பட்டேல் அவருக்கு முன்னதாக விளையாடினார். இதனால் தினேஷ் கார்த்திக்-க்கு 17வது ஓவரில் தான் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் அவர் 6 பந்துகளில் 5 ரன்களை மட்டுமே அடித்து வெளியேறினார்.

ஹெய்டனின் கேள்வி

ஹெய்டனின் கேள்வி

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் மேத்யூவ் ஹெய்டன் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். அதில், தினேஷ் கார்த்திக்கின் பணி குறித்து குழப்பமாக உள்ளது. பேட்டிங் வாய்ப்பே சரிவர கிடைக்காமல் அவர் அணியில் இருப்பதே அர்த்தமில்லாத ஒன்று. தினேஷ் கார்த்திக்-ஐ எனக்கு பிடிக்காது என நினைத்துக்கொள்ள வேண்டாம். அவர் ஒரு சிறந்த வீரர். அவருக்கு நிறைய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று தான் கூறுகிறேன்.

 அகர்கர் அதிருப்தி

அகர்கர் அதிருப்தி

இதற்கு அஜித் அகர்கரும் குரல் கொடுத்துள்ளார், 16 ஓவர்களுக்கு முன்னதாக கூட தினேஷ் கார்த்திக் விளையாடலாம். ஆனால் ஏன் புறக்கணிக்கிறார்கள். ரிஷப் பண்ட்-ஐ விட சிறப்பாக இருப்பார் என எடுக்கப்பட்ட ஒரு வீரரை அக்‌ஷர் பட்டேலுக்கு பின் அனுப்புவது எப்படி சரியாக இருக்கும். தென்னாப்பிரிக்க தொடரிலும் இதே தான் நடந்தது. எனவே அவருக்கு உண்டான இடத்தை கொடுங்கள் எனக்கூறியுள்ளார்.

Story first published: Thursday, September 22, 2022, 13:17 [IST]
Other articles published on Sep 22, 2022
English summary
Australia Legend Mathew hayden questions Dinesh karthik's role in Team India's Playing XI in australia series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+