Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே வின் X Factor யார் ? தோனியின் துருப்புச் சீட்டு யார்? மேத்தீவ் ஹைடன் கருத்து

மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர் . இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள சிறந்த வீரர்கள் யார்? எக்ஸ் பேக்டர் யார் என்பது குறித்து மேத்யூ ஹைடன் பேசி இருக்கிறார்.

ஒரு அணியில் யார் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார் என்பதை வெளியே தெரியாத வகையில் கணிக்க முடியாத அளவில் இருக்கும் நபரை எக்ஸ் பேக்டர் என்று சொல்வார்கள்.

அது யார் என்ற கேள்விக்கு ஹைடன் அளித்துள்ள பதிலை தற்போது பார்க்கலாம். என்னைக் கேட்டால் சி எஸ் கே அணியின் எக்ஸ் பெக்டராக பென் ஸ்டோக்ஸ் தான் இருப்பார் என நினைக்கிறேன்.

X Factor

X Factor

ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் தன்னுடைய முழு திறமையையும் இன்னும் வெளிகாட்டவில்லை. பென்ஸ்டோக்ஸ் போன்ற வீரர் உலகம் முழுவதும் நடைபெறும் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். தற்போது ஸ்டோக்ஸ் சிஎஸ்கே அணிக்குள் வந்திருக்கிறார். இங்கு கிரிக்கெட் மட்டும் தான் முதன்மையானதாக இருக்கும். இந்த சீசனில் அவர் எக்ஸ் பேக்டராக இருக்க பெரிய வாய்ப்பு இருக்கிறது.

துருப்புச் சீட்டு

துருப்புச் சீட்டு

தோனியின் துருப்புச் சீட்டாக ஸ்டோக்ஸ் இருக்க மாட்டார்.அதற்கு பதில் ஜடேஜா தான் இருப்பார் என நான் நினைக்கிறேன்.ஏனென்றால் ஜடேஜா தான் ஆகச்சிறந்த வீரராக இருக்கிறார். என்னைப் பொருத்தவரை இந்த சீசனில் ஜடேஜாவை தான் நான் அதிகமாக எதிர்பார்த்து இருக்கிறேன். அவர் ஒரு தரமான ஆல் ரவுண்டர். சிஎஸ்கே அணியில் உலகத்தரம் வாய்ந்த ஆல்ரவுண்டர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

பெரிய தாக்கம்

பெரிய தாக்கம்

இதில் ஜடேஜா இம்முறை சிஎஸ்கே அணிக்காக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என நான் நம்புகிறேன் என்று ஹைடன் கூறியுள்ளார். ஏற்கனவே ராஜஸ்தான் அணியில் தன்னுடைய திறமையை ஸ்டோக்ஸ் நிரூபித்து இருக்கும் நிலையில் சிஎஸ்கே அணியில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என நம்பப்படுகிறது.

பயிற்சியில் கலக்கல்

பயிற்சியில் கலக்கல்

ஏற்கனவே பயிற்சிகளில் தரமான ஷாட்டுகளை ஸ்டோக்ஸ் வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 43 ஐபிஎல் போட்டிகள் விளையாடி உள்ள பென் ஸ்டோக்ஸ் 920 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதமும் இரண்டு அரை சதமும் அடங்கும்.பந்துவீச்சில் ஒட்டுமொத்தமாக 28 விக்கெட்களை ஸ்டோக்ஸ் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, March 26, 2023, 15:44 [IST]
Other articles published on Mar 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+