Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக சாதனை.. எந்த கிரிக்கெட் வீரரும் நினைத்துக்கூடப் பார்க்காத ரெக்கார்டு.. மாத்யூ ப்ரீட்ஸ்கே அசத்தல்

லண்டன்: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இளம் வீரரான மாத்யூ ப்ரீட்ஸ்கே, சர்வதேச ஒருநாள் போட்டி வரலாற்றில் புதிய சரித்திரம் படைத்து இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், அவர் மீண்டும் ஒரு அரைசதம் விளாசி, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த முத்தரப்பு தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக லாகூரில் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார் மாத்யூ ப்ரீட்ஸ்கே. தனது முதல் போட்டியிலேயே 150 ரன்கள் குவித்தார். அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக 83 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 57 மற்றும் 88 ரன்களும் குவித்தார்.

Matthew Breetzke Creates World Record Becomes First Player to Score 5 Consecutive Fifties in His First Five ODIs

இதன் மூலம், தனது முதல் நான்கு ஒருநாள் போட்டிகளிலும் தொடர்ச்சியாக அரைசதம் கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த சாதனையை நிகழ்த்தியதன் மூலம், 38 ஆண்டுகளாக இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் சாதனையை அவர் முறியடித்தார். சித்து, 1987-ம் ஆண்டு உலகக் கோப்பையில் தனது ஐந்து போட்டிகளில் நான்கு அரைசதங்களை அடித்திருந்தார்.

உலக சாதனை படைத்த ப்ரீட்ஸ்கே

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆடாத ப்ரீட்ஸ்கே, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மீண்டும் அணிக்குத் திரும்பினார். இந்தப் போட்டியிலும் தனது அற்புதமான ஆட்டத்தைத் தொடர்ந்த அவர், 77 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 85 ரன்கள் குவித்தார்.

இது ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானதில் இருந்து அவர் அடிக்கும் ஐந்தாவது தொடர்ச்சியான 50-க்கும் மேற்பட்ட ரன்கள் ஆகும். இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் ஐந்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக 50-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த முதல் மற்றும் ஒரே வீரர் என்ற உலக சாதனையை ப்ரீட்ஸ்கே படைத்துள்ளார்.

லார்ட்ஸ் மைதானத்தில் புதிய மைல்கற்கள்!

இந்த அற்புதமான ஆட்டத்தின் மூலம், லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு தென்னாப்பிரிக்க வீரர் அடித்த அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் என்ற சாதனையையும் ப்ரீட்ஸ்கே தன்வசப்படுத்தினார். இதற்கு முன்பு, 2008-ம் ஆண்டு ஹெர்ஷல் கிப்ஸ் அடித்த 74 ரன்களே சாதனையாக இருந்தது. மேலும், இந்தப் போட்டியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உடன் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தார். இது தென்னாப்பிரிக்க அணிக்கு நான்காவது விக்கெட்டுக்குக் கீழ் எடுக்கப்பட்ட மூன்றாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.

ஐந்து இன்னிங்ஸ்களில் குவித்த ரன்கள்

தனது முதல் ஐந்து ஒருநாள் இன்னிங்ஸ்களில், ப்ரீட்ஸ்கே மொத்தம் 463 ரன்கள் குவித்துள்ளார். இதுவும் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரர் தனது முதல் ஐந்து இன்னிங்ஸ்களில் எடுத்த அதிகபட்ச ரன்களாகும். அவரது பேட்டிங் சராசரி 92.60 ஆக உள்ளது, இது அவரது அபாரமான திறமைக்குச் சான்றாக உள்ளது.

தென்னாப்பிரிக்க அணியில் இதற்கு முன்பு ஜான்டி ரோட்ஸ், குயின்டன் டி காக், மற்றும் ஹென்ரிச் கிளாசென் போன்ற வீரர்கள் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்களை அடித்துள்ளனர். ஆனால், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்திலேயே இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் ப்ரீட்ஸ்கே தான். அவரின் இந்த அசாத்தியமான தொடக்கம், தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது.

Story first published: Friday, September 5, 2025, 10:29 [IST]
Other articles published on Sep 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+