இவர் மட்டும் சதம் அடிக்கலனா, என் தந்தை டிரஸ் இல்லாமல் மைதானத்தில் ஓடுவார்.. ஹைடன் மகள் கருத்து
மும்பை: 2025 ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி நவம்பர் 21ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி கடைசியாக 2011 ஆம் ஆண்டு தான் ஆசஸ் கோப்பையை வென்றது.
இதனால் மிகப்பெரிய ஒரு சவாலை இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா மண்ணில் எதிர்கொள்ள உள்ளது. இந்த நிலையில் இது குறித்து பேசிய முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஹைடன், ஆஸ்திரேலிய வீரர் ஜோ ரூட் ஒரு சதம் கூட அடிக்காமல் போனால் தாம் ஆடை இல்லாமல் மெல்போர்ன் மைதானத்தை சுற்றி வருவேன் என்று கூறியிருந்தார்.

ஹைடனில் இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் வைரலாக மாறியது. ஜோ ரூட் தற்போது நல்ல பார்மில் இருப்பதால் அவர் மீது உள்ள நம்பிக்கையில் ஹைடன் இவ்வாறு கூறினார். இந்த நிலையில் தனது தந்தையின் கருத்துக்கு கிரேஸ் ஹைடன் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் தனது தந்தை ஆடை இல்லாமல் மைதானத்தில் நடந்து செல்லும் அவமானத்தை பெற முடியாது என்றும், இதற்காகவே ரூட் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம் அடித்து விட வேண்டும் என்றும் அவர் பதிவிட்டு இருக்கிறார். ஹைடனின் இந்த கருத்தும் அவருடைய மகளின் பதிலும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
34 வயதான ஜோ ரூட், இதுவரை ஆஸ்திரேலியாலில் 14 டெஸ்ட் போட்டிக்கு விளையாடி 892 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒன்பது அரை சதம் அடங்கும், ஜோடின் சராசரி 35.6 என்ற அளவில் இருக்கின்றது. ஆனால் இதுவரை ஜோ ரூட், ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடந்த டிசம்பர் 2012 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக ஜோ ரூட் அறிமுகமானார்.
இதுவரை 144 டெஸ்ட் போட்டிகளை அடித்துள்ள அவர் 13,543 ரன்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் ஒரு சதம் கூட அடிக்காத ஜோ ரூட், ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 சதமும், 69 அரை சதமும் அடித்துள்ளார். குறிப்பாக ரூட், 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5720 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த நான்கு ஆண்டுகளில் ரூட் 22 சதம், 17 அரை சதம் அடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications