For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி.என்.பி.எல். கிரிக்கெட்: வேட்டியில் அசத்திய மேத்யூ ஹைடன், பிரட் லீ

By Mathi

சென்னை: தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் மேத்யூ ஹைடன், பிரட் லீ ஆகியோர் வேட்டி கட்டி ரசிகர்களை அசத்தினர்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் கலக்கிக் கொண்டிருக்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பரிவார மரியாதையுடன் சாமி தரிசனம் செய்தார்.

கலக்கும் ஹைடன்

கலக்கும் ஹைடன்

பின்னர் சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் கபாலி படம் பார்த்தார்... இப்படி தமிழக கிரிக்கெட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறார் ஹைடன்

கை கோர்த்த பிரட்லீ

கை கோர்த்த பிரட்லீ

குறிப்பாக தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் தொடங்கியது முதலே ஹைடன் பட்டைய கிளப்பி வருகிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற சென்னை, கோவை அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ஹைடனுடன் கை கோர்த்தார் பிரட் லீ-யும் களத்தில் குதித்தார்.

வேட்டியுடன் மைக்...

வேட்டியுடன் மைக்...

இப் போட்டியில் கோவை அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது. போட்டி முடிந்ததும் மைதானத்தில் ஹைடனுடன், பிரட் லீ-யும் வேட்டியுடன் வந்தனர்.

அஜித் ராமுடன் உரையாடல்

அஜித் ராமுடன் உரையாடல்

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற அஜித் ராமுடன் இருவரும் உரையாடினர். அஜித் ராமின் பிறந்தாளில் அவர் ஆட்டநாயகன் விருது பெற்றிருந்தார்.

Story first published: Tuesday, September 6, 2016, 8:01 [IST]
Other articles published on Sep 6, 2016
English summary
Former Australian cricketer Matthew Hayden chat with cricket players in Dhoti.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X