Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவங்க எங்க போனாலும் ஜெயிப்பாங்க..வலுத்த பிட்ச் சர்ச்சை..முன்னாள் வீரர் பதிலடியால் ரசிகர்கள் நிம்மதி

அகமதாபாத்: இந்திய பிட்ச் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் தெரிவித்துள்ள கருத்து இந்திய ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்தின் தோல்விக்கு பிட்ச் மோசமாக இருந்ததே காரணம் என குற்றச்சாட்டுகள் வலுத்து வரும் நிலையில் அதற்கு எதிராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் கருத்து தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டு மோசமான பிட்ச்

குற்றச்சாட்டு மோசமான பிட்ச்

அகமதாபாத் ஸ்டேடியம் தொடக்கம் முதலே ஸ்பின்னர்களுக்கான பிட்சாக இருந்ததால் இங்கிலாந்து அணி திணறியது. குறிப்பாக இங்கிலாந்து தரப்பில் பார்ட் டைம் ஸ்பின்னராக இருக்கும் ரூட் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் மற்றும் அக்‌ஷர் சுழலில் சிக்கி இங்கிலாந்து 2 இன்னிங்ஸ்களிலும், 112 & 81 ரன்களுக்கு சுருண்டது.

இந்திய ரசிகர்கள் நிம்மதி

இந்திய ரசிகர்கள் நிம்மதி

இது குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன், பிட்ச் குறித்து எனக்கு எந்த குறைபாடும் தோன்றவில்லை. அணிகள் உள்நாட்டிலும் சரி, அயல்நாட்டிலும் சரி, பல வித சூழ்நிலைகளிலும் களங்களிலும் ஆட வேண்டும். அதுதான் நல்ல கிரிக்கெட் என தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து வீரர்களுக்கு அட்வைஸ்

இங்கிலாந்து வீரர்களுக்கு அட்வைஸ்

அகமதாபாத் பிட்ச்சில், பந்தில் பெரிதாக டேர்னிங் இல்லை. நான் இது போன்ற குறைவான டேர்னிங் உள்ள பிட்ச்களில் ஸ்வீப் ஷாட் ஆடவே பரிந்துரைப்பேன். இது போன்ற ஆடுகளத்தில் அஸ்வின், அக்‌ஷர் பந்துகளை சமாளிக்க மிகவும் கவனத்துடன் ஷாட் ஆட வேண்டும். இல்லையென்றால் விக்கெட் விழுந்துவிடும் என ஹெய்டன் தெரிவித்துள்ளார்.

எங்கும் வெல்லும்

எங்கும் வெல்லும்

அகமதாபாத் டெஸ்ட் மூலம், இந்திய அணி எப்படி பட்ட களத்திலும் தங்களால் போராட மட்டும் அல்ல வெல்லவும் முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். அவர்கள் அயல்நாட்டிலும் சரி, உள்நாட்டிலும் சரி சிறப்பாக செயல்பட்டு வெல்லக்கூடிய பலமான அணி என மேத்யூ ஹெய்டன் தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, February 27, 2021, 17:05 [IST]
Other articles published on Feb 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+