Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே வின் சரிவு காலம் தொடங்குகிறது.. 2 பேரால் எல்லாமே மாறிவிடும்.. எச்சரிக்கை கொடுத்த ஹைடன்

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் என ஒட்டு மொத்த தோனி ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

2021 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற சிஎஸ்கே அணி கடந்த ஆண்டு படுதோல்வியை தழுவியது. புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்து சோகமான தொடராக சிஎஸ்கேவுக்கு அது அமைந்தது.

இந்த நிலையில் நடப்பாண்டில் சிஎஸ்கே அணிக்கு சிக்கல் இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டாட்ஸ் ஆர்மி

டாட்ஸ் ஆர்மி

சிஎஸ்கேவை எப்போதுமே ரசிகர்கள் டாட்ஸ் ஆர்மி என்று தான் அழைப்பார்கள். காரணம் சிஎஸ்கே அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் 30 அல்லது 35 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தார்கள். தற்போதுள்ள அணியில் தோனிக்கு 41 வயதாகவும், அம்பத்தி ராயுடுக்கு 37 வயதாகும் உள்ளது. இவர்களை தவிர மற்ற வீரர்கள் பெரும்பாலானோர் இளம் வீரர்களாகவே இருக்கிறார்கள்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹைடன் டாட்ஸ் ஆர்மி என்று ரசிகர்கள் சிஎஸ்கேவை அழைப்பார்கள் .

இருவருக்கும் வயதாகிவிட்டது

இருவருக்கும் வயதாகிவிட்டது

இந்த ஆண்டும் சிஎஸ்கேவுக்கு அதே பெயர் இருக்கும் என நான் நினைக்கிறேன். தோனிக்கும் அம்பத்தி ராயுடுவுக்கும் வயதாகிவிட்டது. இந்த இரண்டு வீரர்களும் அணியின் சீனியராக இருக்கிறார்கள். இவ்விருவரும் சிறப்பாக விளையாடினால் மட்டுமே சென்னை அணி வெற்றி பெறும். இவர்களுடைய அனுபவம் நிச்சயம் அணிக்கு கை கொடுக்கும். ஆனால் இந்த விஷயத்தில் இன்னொரு பக்கமும் இருக்கிறது. இந்த இரண்டு வீரர்களும் வயதாகி விட்டதால் சரியாக விளையாட முடியாத நிலை ஏற்படலாம்.

சரிவாக இருக்கலாம்

சரிவாக இருக்கலாம்

அப்படி நடந்தால் அது சிஎஸ்கே அணியின் சரிவாக கூட இருக்கலாம். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மோசமாக விளையாடவும் வாய்ப்பு இருக்கிறது. இம்முறை சிஎஸ்கே அணியில் ராபின், உத்தப்பா, கிறிஷ் ஜோர்டன், பிராவோ போன்ற வீரர்கள் இல்லை. அதற்கு பதிலாக அணியை வலுப்படுத்தும் விதமாக இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்சை 16 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

ஹைடன் சொல்வது போல் தோனியும் ராயூடுவும் கிரிக்கெட் விளையாடி நீண்ட மாதம் ஆகிவிட்டது.இவர்கள் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே பேட்டிங் வலுவாக இருக்கும். இல்லையெனில் பென் ஸ்டோக்ஸ், ருத்துராஜ், ஜடேஜா போன்ற வீரர்கள் தான் அணியின் பேட்டிங்கை காப்பாற்ற வேண்டும்.

Story first published: Saturday, March 25, 2023, 14:41 [IST]
Other articles published on Mar 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+