Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘அவர குறைச்சி எடை போடாதிங்க’.. இந்திய வீரரை டார்கெட் செய்த பாகிஸ்தான் கோச்.. ஸ்பெஷல் ஸ்கெட்ச் ரெடி?

அமீரகம்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ஒருவர் தான் பெரும் தலைவலியாக இருப்பார் என முன்னாள் வீரர் மேத்யூவ் ஹெய்டன் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 போட்டிகள் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது.

இதில் வரும் ஞாயிறு அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகாக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

 முக்கிய ஆட்டம் முக்கிய போட்டி

முக்கிய ஆட்டம் முக்கிய போட்டி

உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதே இல்லை. எனவே இந்த முறை கண்டிப்பாக இந்திய அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் வீரர்கள் உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுக்கு அதிக அனுபவம் உள்ளதால் அந்த அணிக்கு வெற்றி பெற சம வாய்ப்புகள் உள்ளது. எனவே இந்திய அணி தனது முழு பலத்துடன் களமிறங்க வேண்டிய சூழல் உள்ளது.

 ஹெய்டனின் கணிப்பு

ஹெய்டனின் கணிப்பு

இந்நிலையில் இந்திய அணியின் ஒரு வீரர் தான் தலைவலி கொடுப்பார் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூவ் ஹெய்டன் தெரிவித்துள்ளார். ஹெய்டன் தற்போது பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இந்தபோட்டி குறித்து பேசியுள்ள அவர், இந்திய அணியின் ஓப்பனிங் வீரர் கே.எல்.ராகுல் தான் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பார். அவரை நீக்கிவிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கலாம்.

அந்த இரு வீரர்கள்

அந்த இரு வீரர்கள்

கே.எல்.ராகுலின் ஆட்டத்தை அவரின் ஆரம்பக் காலக்கட்டம் முதலே நான் பார்த்து வருகிறேன். அவர்களின் இன்னல்கள் மற்றும் டி20 போட்டிகளில் அவரின் அதிரடி எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியும். இதே போல ரிஷப் பண்ட் போன்ற ஆக்ரோஷ பேட்டிங்கை இயற்கையாகவே கொண்ட வீரரையும் நான் நன்கு அறிவேன். அவருக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டால் பந்துவீச்சை துவம்சம் செய்துவிடுவார். அவரின் நோக்கமும் அதுவே ஆகும்.

தோனியின் ஆளுமை

தோனியின் ஆளுமை

இவை அனைத்தையும் விட இந்திய அணியின் ஆலோகராக தோனி இருக்கிறார். தோனி மற்றும் மோர்கன் ஆகியோரின் தனிப்பட்ட ஆட்டம் மோசமாக இருக்கலாம். ஆனால் அவர்களின் ஆளுமைதான் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணியை ஐபிஎல் இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்றது. எனவே தோனி ஆலோசகராக செயல்படுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என மேத்யூவ் ஹெய்டன் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, October 21, 2021, 21:57 [IST]
Other articles published on Oct 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+