Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மோக்கா.. மோக்கா.. இந்திய வெற்றிக்கு பிறகு புதிதாக ஒரு பட்டாசு வீடியோ வெளியிட்ட ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

டெல்லி: பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு எதிரான இந்தியாவின் ஆட்டங்களின்போது பட்டாசை மையப்படுத்தி வெளியிடப்பட்ட விளம்பரத்துக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து.. ஐக்கிய அரபு எமிரேட்டுடடான போட்டிக்காக ஒரு விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கடந்த 15ம்தேதி, அடிடெய்டில் மோதின. அந்த போட்டிக்கு முன்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒரு புரமோஷன் விளம்பரத்தை வெளியிட்டது.

பரணில் போட்ட பட்டாசு

பரணில் போட்ட பட்டாசு

அந்த விளம்பரத்தில் கராச்சியில் பாகிஸ்தான் ரசிகர், இந்தியாவுக்கு எதிரான போட்டியை பார்த்துவிட்டு பட்டாசு வெடிக்க காத்திருக்கிறார். 1992 முதல் 2011 வரை உலக கோப்பைகளில் 5 முறை பாகிஸ்தான் தோற்பதை அவர் பார்த்து பட்டாசு வெடிக்க முடியாமல் போகிறது. அதுமட்டுமல்லாமல், அவருக்கு பிறந்து குழந்தையும் வெடி போட முடியாமல் ஏமாற்றமடைவதை போல அந்த விளம்பரம் வெளியானது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இதற்கு இந்திய ரசிகர்களிடம், அமோக வரவேற்பு கிடைத்தது. இதனிடையே பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தி 6வது தொடர்ச்சியான வெற்றியை பதிவு செய்தது.

மோக்கா.. மோக்கா

மோக்கா.. மோக்கா

இதனிடையே நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்காகவும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வீடியோ வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில், இதற்கு முன்பு உலக கோப்பையில், 3 முறையும், இந்தியா தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றதை குறிப்பிட்டு, இந்த முறை முயற்சி செய்யுங்கள் என்று கேலி செய்யும் வகையில் ஒரு விளம்பரம் வெளியானது. மோக்கா.. மோக்கா என்று கூறியபடி பட்டாசு பெட்டியை இந்திய ரசிகர்களிடம் தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் அளிப்பது போல அந்த விளம்பர வீடியோ வெளியாகியிருந்தது.

தென் ஆப்பிரிக்கா வீழ்ந்தது

தென் ஆப்பிரிக்கா வீழ்ந்தது

இந்த விளம்பரம் இந்திய ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது. ஆனால் நேற்றைய போட்டியில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்றது.

புது வீடியோ

இதையடுத்து இப்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் புதிதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான போட்டியை தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் டிவியில் பார்த்துக் கொண்டுள்ளனர். அவர்கள் வெடிப்பதற்காக பட்டாசையும் வைத்துள்ளனர். ஆனால் இந்தியா வெற்றி பெற்றதை பார்த்ததும், பட்டாசை எடுத்து உடைத்துப்போட்டு, தென் ஆப்பிரிக்க டி-சட்டையை கழற்றி எறிந்துவிட்டு வெளியே போகிறார்.

ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு ஆதரவு

ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு ஆதரவு

அங்கு ஐக்கிய அரபு எமிரேட் டி-சட்டை போட்ட ரசிகர் வாசலில் நிற்கிறார். அவர் ஐக்கிய அரபு எமிரேட் டி-சட்டையை தென் ஆப்பிரிக்க ரசிகரை அணியச் சொல்லி கொடுக்கிறார். ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு சப்போர்ட் செய்து, அந்த அணி இந்தியாவை வீழ்த்தினால் பட்டாசை வெடிக்கும்படி அறிவுறுத்துவதாக அந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்த விளம்பரமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதிலும் பின்னணியில் மோக்கா.. மோக்கா பாடுகிறது. வரும் 28ம் தேதி, சனிக்கிழமை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சுடன் இந்தியா ஆட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, February 23, 2015, 15:43 [IST]
Other articles published on Feb 23, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+