For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆம்பன் புயல் பாதிப்பு... பாதிக்கப்பட்டவர்களை கடவுள் காப்பாற்றுவார்... விராட் கோலி பிரார்த்தனை

கொல்கத்தா : ஆம்பன் புயலால் மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Recommended Video

Raina compares Dhoni and Rohit Sharma's captaincy

மேற்குவங்கத்தில் ஆம்பன் புயலுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தான் பிரார்த்தனை செய்வதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இவருக்கும் உங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா... விராட் கோலியிடம் கேள்வி எழுப்பிய அர்ஜூன் கபூர்இவருக்கும் உங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா... விராட் கோலியிடம் கேள்வி எழுப்பிய அர்ஜூன் கபூர்

மேற்கு வங்கம், ஒடிசா பாதிப்பு

மேற்கு வங்கம், ஒடிசா பாதிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடே அசாதாரணமான சூழலில் உள்ளது. இந்நிலையில், மேலும் துயரம் கொடுக்கும் நிகழ்வாக ஆம்பன் புயல் தலைவிரித்தாடுகிறது. இதுவரை இல்லாத அளவில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் மிகப்பெரிய பாதிப்பை இந்த புயல் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் கோரிக்கை

முதலமைச்சர் கோரிக்கை

இந்த புயல் இதுவரை இல்லாத அளவில் மேற்குவங்கத்தை அதிகமாக பாதித்துள்ளதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். புயல் பாதிப்பில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள சூழலில் இந்த புயலின் பாதிப்பிலிருந்து மீண்டுவர ஒரு லட்சம் கோடி ரூபாய் நிவாரண உதவி தேவைப்படும் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கடவுள் காப்பாற்றுவார்

கடவுள் காப்பாற்றுவார்

இந்நிலையில், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தான் பிரார்த்தனை மேற்கொள்வதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் கடவுள் காப்பாற்றுவார் என்று தெரிவித்துள்ள கோலி, அங்கு விரைவில் இயல்புநிலை திரும்பும் என்றும் கூறியுள்ளார்.

பாதுகாப்பாக இருக்க கோரிக்கை

பாதுகாப்பாக இருக்க கோரிக்கை

இதேபோல இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தித்துள்ளார். ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் உள்ளவர்களின் பாதுகாப்புக்காக தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஹர்பஜன் சிங்கும் கொல்கத்தா நகர மக்களை பாதுகாப்பாக இருக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

Story first published: Thursday, May 21, 2020, 20:57 [IST]
Other articles published on May 21, 2020
English summary
Virat Kohli said his thoughts and prayers went out to those affected
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X