Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விலகிய "2" தடைகள்.. ரோஹித்துடன் ஓப்பனிங் இறங்க.. மாயங்க் வீட்டுக் கதவை தட்டிய "மெகா" வாய்ப்பு

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போட்டி முடிந்து வாரங்கள் பல ஓடிவிட்டன. ஆனால், அதன் மீதான இம்பேக்ட் மட்டும் குறையவில்லை.

Recommended Video

Prithvi Shaw, Padikkalல England வரசொல்றீங்க! இவர நியாபகம் இருக்கா? | Oneindia Tamil

எப்படி குறையும்? வீரர்கள் மீது ரசிகர்கள் வைத்த நம்பிக்கையை விட, அணி நிர்வாகம் அதிக நம்பிக்கை வைத்திருந்தது ஜாஸ்தியாச்சே.

ஆனால், இறுதிப் போட்டியின் முடிவு ஏமாற்றம் அளித்தது என்பதை விட, இந்திய அணி தோற்ற விதம் நிர்வாகத்தை கடும் அதிருப்திக்கு ஆளாக்கியது.

ஓப்பனிங் வீரர்களாக

ஓப்பனிங் வீரர்களாக

இதன் விளைவு, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியை தேர்வு செய்வதில் எதிரொலித்து வருகிறது. ஆம்! ஓப்பனர்கள் ஷுப்மன் கில், ரோஹித் ஷர்மா என இருவர் மீதும் அதிக நம்பிக்கை வைக்கப்பட்டது. ஓப்பனிங் வீரர்களாக ரெடியாக இருந்த லோகேஷ் ராகுல், மாயங்க் அகர்வால் ஆகியோரை நீக்கிவிட்டு, ரோஹித் - கில் இணைக்கு வாய்ப்பு கொடுத்ததிலேயே, எந்த அளவுக்கு அவர்கள் மீது நம்பிக்கை வைக்கப்பட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

ரிசர்வ் வீரர்களாக

ரிசர்வ் வீரர்களாக

ஆனால், இந்த பார்ட்னர்ஷிப் இறுதிப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 50+ ரன்ஸ் எடுத்ததைத் தவிர, வேறு ஒன்றும் செய்யவில்லை. எனினும், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் - கில் இணைக்கு வாய்ப்பு அளிக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. ஆனால், அதற்கும் சிக்கல் ஏற்படும் விதமாக, ஷுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட, அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால், அவருக்கு பதில், இலங்கை தொடரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய 'ஏ' அணியில் இடம்பெற்றுள்ள ப்ரித்வி ஷா மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரை ரிசர்வ் வீரர்களாக அணியில் சேர்க்க, இந்திய அணி சார்பில் பிசிசிஐ-க்கு கடிதம் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது.

வீடு தேடி வரும் வாய்ப்பு

வீடு தேடி வரும் வாய்ப்பு

அதேசமயம் அப்போது மாற்று வீரர்களாக அணியில் இருந்த மாயங்க் அகர்வால் மற்றும் லோகேஷ் ராகுல் குறித்து பெரிதாக விவாதிக்கவில்லை என்றும் தெரிகிறது. இந்த சூழலில் தான், பிசிசிஐ தரப்பில் வெளியாகியுள்ள தகவலில், இந்திய அணியின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்றும், மாயங்க் அகர்வால் ரோஹித் ஷர்மாவுடன் ஓப்பனிங் இறங்குவார் என்று கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூசிலாந்து, ஆஸ்திரேலிய தொடரில் பெரிதாக சோபிக்காததால், உலக டெஸ்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அகர்வாலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், கில் காயமடைந்து வெளியேற, ப்ரித்வி ஷாவை அழைக்கும் கோரிக்கையையும் பிசிசிஐ புறக்கணிக்க, வாய்ப்பு மாயங்க் அகர்வால் வீட்டுக் கதவை தேடி வந்து தட்டியிருக்கிறது.

இப்போ ஹேப்பி

இப்போ ஹேப்பி

ஏற்கனவே, தான் இங்கிலாந்து தொடரிலும் சேர்க்கப்படுவோமா என்ற ஐயத்தில், மாயங்க் எதிலும் பெரிதாக ஆர்வம் காட்டாமல், அதிக நேரம் தனிமையில் செலவிடுவதாக கேப்டன் கோலிக்கு தெரிவிக்கப்பட, உடனடியாக மாயங்க் அகர்வாலை தொடர்பு கொண்டு பேசியது குறித்து செய்திகள் வெளியானது. தற்போது, பிசிசிஐ தரப்பிலேயே மாயங்க் அணியில் சேர்க்கப்படுவார் என்று அறிவிக்க, மனிதர் புது தெம்புடன் களத்திற்கு ரெடியாகி கொண்டிருக்கிறாராம்.

Story first published: Thursday, July 8, 2021, 22:11 [IST]
Other articles published on Jul 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+