Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவருக்கும் காயமா? அணியில் 11 பேராவது இருக்கிறார்களா? சிக்கலில் மாட்டிய இந்திய அணி.. பின்னணி

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்டில் இருந்து மயங்க் அகர்வாலும் காயம் காரணமாக வெளியேற வாய்ப்பு உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று டிராவில் முடிந்தது. இதனால் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் இரண்டு அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இதில் வெற்றிபெறும் அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வெல்லும்.

போட்டி எப்படி

போட்டி எப்படி

இந்த நிலையில் நான்காவது டெஸ்டில் இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக ஆட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜடேஜா, விஹாரி, ராகுல், பும்ரா ஆகிய நான்கு பேர் அடுத்த போட்டியில் ஆட மாட்டார்கள். ஏற்கனவே காயத்தால் இஷாந்த், புவனேஷ்வர் குமார், ஷமி, உமேஷ் ஆகியோர் காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெறவில்லை.

மயங்க்

மயங்க்

இதனால் அடுத்த போட்டியில் விஹாரிக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணிக்குள் வருவார் என்று கூறப்பட்டது. மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா ஓப்பனிங் இறங்குவார்கள். சுப்மான் கில் மிடில் ஆர்டரில் ஆடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இதிலும் ஒரு சிக்கல் உள்ளது.

காயம்

காயம்

பயிற்சியின் போதே மயங்க் அகர்வாலுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான ஸ்கேன் தற்போது எடுக்கப்பட உள்ளது. இதில் முடிவு அவருக்கு எதிராக வந்தால் மயங்க் அகர்வாலும் அடுத்த போட்டியில் ஆட மாட்டார். இவரும் ஆட முடியாமல் போனால் எப்போதும் போல சுப்மான் கில் - ரோஹித் சர்மா ஓப்பனிங் இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

யார்

யார்

அதேபோல் அணியில் பிரித்வி ஷா சேர்க்கப்படுவார். அவர் ஒன் டவுன் இறங்குவார் என்று கூறுகிறது. இந்திய அணியில் முக்கியமான பல வீரர்கள் காயம் அடைந்துவிட்டனர். இதனால் மீதம் இருக்கும் வீரர்களை வைத்து விளையாட வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

Story first published: Tuesday, January 12, 2021, 10:49 [IST]
Other articles published on Jan 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+