Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் அணிகளே உஷார்.!!!.. பஞ்சாப் அணி கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம்.. அப்படி என்ன ஸ்பெஷல்!

பஞ்சாப்: மற்ற ஐபிஎல் அணிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது புதிய கேப்டன் யார் என்பது குறித்து அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கி இறுதிப்போட்டி வரும் மே 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், பஞ்சாப் அணி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் அணி கேப்டன்

பஞ்சாப் அணி கேப்டன்

அணியின் பெயர், ஜெர்ஸி என பல மாற்றங்களை ஒவ்வொரு ஆண்டும் செய்த போதும், பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. அந்த அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலும் அணியில் இருந்து வெளியேறியதால் புதிய கேப்டனாக நியமிப்பதில் குழம்பி வந்தது.

அறிவிப்பு வெளியானது

அறிவிப்பு வெளியானது

இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்தபடியே சீனியர் வீரரான மயங்க் அகர்வால் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் கே.எல்.ராகுலுக்கு அடுத்தபடியாக அதிக அனுபவம் கொண்டவர் மயங்க் அகர்வால். இதுவரை 100 போட்டிகளில் விளையாடி 2,135 ரன்களை குவித்துள்ளார். இதில் 11 அரைசதங்கள் ஆகும். எனவே அவர் தான் அணியை வழிநடத்த சரியான தேர்வாக இருப்பார் என கருதப்படுகிறது.

வியூகங்கள் அறிந்தவர்

வியூகங்கள் அறிந்தவர்

ஐபிஎல்-ல் விராட் கோலி, தோனி, கே.எல்.ராகுல், பாண்ட்யா, ரோகித் சர்மா என அனைவரின் திட்டங்கள் குறித்தும் மயங்கிற்கு நன்கு தெரியும். தொடக்க ஆட்டக்காரர் என்பதால், போட்டியின் தொடக்கத்தில் இருந்தே எப்படி காய் நகர்த்த வேண்டும் என்பதையும் நன்கு அறிந்தவர். இதனால் புதிய ரூபத்தில் பஞ்சாப் அணியை இந்தாண்டு பார்க்கலாம்.

Recommended Video

RCB -ஐ விட்டு போகாமல் இருந்ததற்கு 2 காரணம் தான்.. உண்மையை சொன்ன Virat Kohli
மயங்கின் கருத்து என்ன

மயங்கின் கருத்து என்ன

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், இந்த சிறந்த அணியை வழிநடத்துவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த பொறுப்பை நான் மிகுந்த நேர்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன். இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருகும் திறமையான வீரர்களால் எனது பணி எளிதாக தான் இருக்கும் என நம்புவதாக கூறியுள்ளார்.

Story first published: Monday, February 28, 2022, 13:40 [IST]
Other articles published on Feb 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+