For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு இன்னிங்சில் ஆடினால் போதுமா.. பொறுப்பின்றி விக்கெட்டை இழக்கும் மூத்த வீரர்.. கோபத்தில் பிசிசிஐ!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மயங்க் அகர்வால் தொடர்ந்து சொதப்பி வருவது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ஓப்பனிங் வீரராக களமிறங்கி வந்தவர் மயங்க் அகர்வால். கடந்த வருடம் ஆஸ்திரேலிய தொடரில் மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடிய காரணத்தால் இந்த வருடம் மயங்க் அகர்வால் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் ஆஸ்திரேலிய தொடரில் மயங்க் அகர்வால் தொடர்ந்து மோசமாக ஆடி சொதப்பி வருகிறார்.

சொதப்பல்

சொதப்பல்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் ஆடிய விதம் பெரிய அளவில் விமர்சனங்களுக்கு உள்ளானது. ஒரு ஓப்பனிங் வீரராக இந்திய அணிக்கு மயங்க் அகர்வால் சரியான தொடக்கம் கொடுக்கவில்லை. முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் மயங்க் அகர்வால் சொதப்பினார்.

இரண்டாவது டெஸ்ட்

இரண்டாவது டெஸ்ட்

அதேபோல் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் மயங்க் அகர்வால் தனது மோசமான ஆட்டம் காரணமாக சொதப்பினார். அந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரஹானே சிறப்பாக ஆடி, பவுலிங் மட்டும் எடுபடாமல் போய் இருந்தால் இந்திய அணி தோல்வி அடைந்து இருக்கும். இளம் வீரர் சுப்மான் கில் ஆடிய அளவிற்கு கூட மயங்க் அகர்வால் ஆடவில்லை.

 மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

இந்த நிலையில் இவரின் மோசமான ஆட்டம் காரணமாக மூன்றாவது டெஸ்டில் நீக்கப்பட்டு ரோஹித் சர்மா உள்ளே வந்தார். நான்காவது டெஸ்டில் வீரர்கள் இல்லாத காரணத்தால் மயங்க் அகர்வாலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் மீண்டும் வழங்கிய வாய்ப்பை மயங்க் அகர்வால் கெடுத்துக்கொண்டார்.

 ஓப்பனிங்

ஓப்பனிங்

ஓப்பனிங்கில்தான் சொதப்புகிறார் என்று மிடில் ஆர்டரில் இறக்கினால், அதிலும் அவசரப்பட்டு ஆடி, தேவையில்லாத ஷாட்களை எடுத்து அவசரப்பட்டு ஆடி அவுட்டானார். ஷரத்துல், சுந்தர் போன்ற பவுலர்களிடம் இருக்கும் நிதானம், தெளிவு கூட மயங்க் அகர்வாலிடம் இல்லை.

மோசம்

மோசம்

ஒரு சில இன்னிங்ஸ்தான் இவர் சரியாக ஆடுகிறார். வேறு எதிலும் இவர் நன்றாக ஆடுவது இல்லை என்று இவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இவரின் மோசமான ஆட்டம் காரணமாக வரும் நாட்களில் சுப்மான் கில் போன்ற இளம் வீரர்களிடம் இவர் நிரந்தரமாக வாய்ப்பை இழக்க போகிறார் என்கிறார்கள்.

Story first published: Sunday, January 17, 2021, 11:11 [IST]
Other articles published on Jan 17, 2021
English summary
Mayank Agarwal failed to impress once again for team Team India against Australia.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+