
ரன் குவித்த மயங்க் - யுவராஜ் ஜோடி
நேற்றைய கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிரான போட்டியின்போது யுவராஜும், மயங்க் அகர்வாலும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 106 ரன்களைக் குவித்து, டெல்லி அணிக்கு முதல் வெற்றி கிடைக்க உதவினர்.

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி
தொடர்ந்து 11 ஐபிஎல் போட்டிகளில் தோற்று புதிய சாதனை படைத்து வந்த டெல்லி அணிக்கு மயங்க்கும், யுவராஜும் சேர்ந்து விமோச்சனம் அளித்து நேற்று முதல் வெற்றியைப் பரிசளித்தனர்.

24 வயதில் அதிரடி ஆட்டம்
24 வயதாகும் மயங்க் அகர்வால், நேற்று 48 பந்துகளில் 68 ரன்களைக் குவித்தார். இதில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடக்கம். அவருடன் இணைந்து யுவராஜும் சிறப்பாக ஆடி அரை சதம் போட்டார்.

ஆரஞ்சுத் தொப்பி
நடப்புத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார் மயங்க். 3 போட்டிகளில் 120 ரன்களை எடுத்துள்ளார் மயங்க். முதலிடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஸ்டீவன் ஸ்மித் 122 ரன்களுடன் உள்ளார்.

மயங்க் பிரில்லியன்ட்...!
போட்டிக்குப் பின்னர் யுவராஜ் சிங் கூறுகையில் மயங்க் பிரில்லியன்ட்டாக இருக்கிறார். மாபெரும் திறமைசாலி. அவரிடம் நான் முதலிலிருந்தே சொல்லி வருகிறேன், பிரமாதமாக வருவாய் என்று. சிறப்பாக ஆடி வருகிறார் மயங்க்.

சீக்கிரமே பிரமோஷன்
அவரது திறமைக்கு, அவருக்கு சீக்கிரமே இந்திய அணியிலும் இடம் கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். அவரது ஆட்டத் திறமை, டுவென்டி 20 போட்டிகளுக்கு ஏற்றார் போல உள்ளது என்றார் யுவராஜ் சிங்.

கர்நாடக வீரர்
மயங்க், தற்போது கர்நாடகத்தில் ஆடி வருகிறார். அங்கு 13 முதல் தர போட்டிகளில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணி நடப்பு ஆண்டில் தக்க வைத்துக் கொண்ட வெகு சில வீரர்களில் இவரும் ஒருவர்.


Click it and Unblock the Notifications











