Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரை உட்கார வையுங்கள்.. அணியில் எடுக்க வேண்டாம்.. முக்கிய வீரரை கழட்டி விடும் கோலி.. பின்னணி

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மயங்க் அகர்வால் ஆட வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்தியா வென்றுள்ளது. இந்த தொடரை அடுத்து தற்போது இங்கிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்ள இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரையும் இந்தியா வென்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆடும்.

இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

சென்னை

சென்னை

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மயங்க் அகர்வால் ஆட வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மயங்க் அகர்வால் மோசமாக ஆடினார். வாய்ப்பு கிடைத்த போட்டியில் எல்லாம் சொதப்பினார்.

 டெஸ்ட்

டெஸ்ட்

கடந்த 2019ம் வருடம் நடந்த டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் மிகவும் சிறப்பாக ஆடி நம்பிக்கை அளித்தார். அதன்பின் ஐபிஎல் 2020 தொடரிலும் சிறப்பாக ஆடினார். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் மயங்க் அகர்வால் சரியாக ஆடவில்லை.

ஓப்பனிங்

ஓப்பனிங்

ஓப்பனிங் இறங்கியும் இவர் நம்பிக்கை அளிக்கவில்லை. மிடில் ஆர்டரிலும் நம்பிக்கை அளிக்கவில்லை. இதனால் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் வாய்ப்பு கிடைக்காது என்கிறார்கள். சென்னையில் தற்போது வலைப்பயிற்சியில் மயங்க் அகர்வால் ஈடுபட்டு வருகிறார்.

வலைப்பயிற்சி

வலைப்பயிற்சி

ஆனால் வலைப்பயிற்சியிலும் இவர் சிறப்பாக ஆடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோலி இவர் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டாம், 5 பவுலர்களை களமிறக்கலாம் என்ற முடிவில் கோலி இருக்கிறார்.

ஓய்வு அவசியம்

ஓய்வு அவசியம்

மயங்க் அகர்வால் பார்மில் இல்லை. அவருக்கு ஓய்வு அவசியம். ஓய்வு எடுத்தால் அவர் பார்மிற்கு திரும்ப வாய்ப்புள்ளது. அதனால் இப்போது அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது என்று கோலி முடிவெடுத்துள்ளார் என்கிறார்கள்.

Story first published: Tuesday, February 2, 2021, 16:34 [IST]
Other articles published on Feb 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+