Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு.. அந்த இளம் வீரருக்கு இடம் இல்லையா? இந்திய அணியில் கேலிக்கூத்து!

Recommended Video

Mayank Agarwal | மயங்க் அகர்வாலுக்கு அணியில் இடம் இல்லை- வீடியோ

மும்பை : உலகக்கோப்பை தொடருக்கு வேக, வேகமாக தேர்வு செய்யப்பட ஒரு இளம் வீரர் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை.

ஒரு ஒருநாள் போட்டியில் கூட ஆடாத அந்த இளம் வீரரை உலகக்கோப்பை அணியில் ஏன் தேர்வு செய்தார்கள்? இப்போது எளிதான வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு ஏன் தேர்வு செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது இந்திய அணி. அதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியில் இல்லை

இந்திய அணியில் இல்லை

அந்த அணியில் மயங்க் அகர்வால் இடம் பெறவில்லை. இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. உலகக்கோப்பை அணியில் பல வீரர்களை புறம் தள்ளி, ஒரு ஒருநாள் போட்டியில் கூட ஆடி இருக்காத நிலையில், அணியில் வாய்ப்பு பெற்றார்.

உலகக்கோப்பையில் வாய்ப்பு

உலகக்கோப்பையில் வாய்ப்பு

உலகக்கோப்பை தொடரில் விஜய் ஷங்கர் காயமடைந்த போது, மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டார் மயங்க் அகர்வால். அவர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருந்தாலும், ஒருநாள் போட்டிகளில் இன்னும் அறிமுகம் ஆகவில்லை.

அப்போதே குழப்பம்

அப்போதே குழப்பம்

உலகக்கோப்பை அணியில் அவர் தேர்வு செய்யப்பட்ட போதே பலரும் குழப்பமடைந்தனர். காரணம், கிட்டத்தட்ட உலகக்கோப்பை லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடையும் போது தான் அவர் அணியில் சேர்க்கப்பட்டார். ஒருநாள் போட்டி அனுபவம் இல்லாத இவரை எப்படி அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் ஆட வைப்பார்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. ஆனால், அவர் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை.

வாய்ப்பு மறுப்பு

வாய்ப்பு மறுப்பு

அப்போது களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றே பலரும் கருதினர். ஆனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது.

தேர்வுக்குழு விளக்கம்

தேர்வுக்குழு விளக்கம்

இது குறித்து தேர்வுக் குழு தலைவரிடம் கேட்ட போது உலகக்கோப்பை தொடரில் துவக்க வீரர் ராகுல் பீல்டிங் செய்யும் போது காயமடைந்து இருந்தார். அதனால், முன்னேற்பாடாக மாற்று துவக்க வீரராக மயங்க் அகர்வாலை அணியில் சேர்த்தோம் என்று கூறினார். ஆனால், இப்போது ஏன் அவரை அணியில் சேர்க்கவில்லை என அவர் கூறவில்லை.

பெரிய கூத்து

பெரிய கூத்து

இனி மயங்க் அகர்வால் இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற வேண்டும் என்றால் டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக ஆடிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல, உள்ளூர் தொடர்களிலும் தொடர்ந்து ரன் குவிக்க வேண்டும். அப்படியும் வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டால், அதற்கான பதில் யாருக்கும் தெரியாது. அப்புறம் ஏன் அவரை உலகக்கோப்பை அணியில் மட்டும் சேர்த்தார்கள்?

இந்திய அணியில் வீரர்கள் தேர்வு என்பது பெரிய கேலிக் கூத்தாக உள்ளது!

Story first published: Sunday, July 21, 2019, 22:26 [IST]
Other articles published on Jul 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+