சமூகதளங்களில் புருவ அழகி பிரியாவை பின்தள்ளி முன்னேறி வரும் இளம் கிரிக்கெட் வீரர்

Posted By:

டெல்லி: ஒரு பாடலில், சில விநாடிகள் புருவங்களை அசைத்தும், கண்ணடித்தும் உலகெங்கும் ஒரே இரவில் பிரபலமானவர் புருவ அழகி பிரியா வாரியர். அதே போல் முதல் ஐபிஎல் போட்டியில் முதல் மூன்று ஆட்டங்களில் கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்து, இன்ஸ்டாகிராமில் வேகமாக பிரபலமாகி வருகிறார் மும்பை இந்தியன்ஸ் அணியின் மயாங்க் மார்கண்டே.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் சீசன் 11 நடந்து வருகிறது. போட்டியின் 14வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதி வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு பவுலிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. மும்பை பேட்டிங் செய்து வருகிறது.

Mayank Markande became famous in the instagram after his IPL success

20 வயதாகும் பஞ்சாபை சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளர் மயாங்க் மார்கண்டேவை, ரூ.20 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் ஏலம் எடுத்திருந்தது.

இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்த சீசனில் இதுவரை அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் மயாங்க் உள்ளார்.

இதெல்லாம் மேட்டரே இல்லை. இந்த ஐபிஎல் போட்டிக்கு முன்பு, இன்ஸ்டாகிராமில் வெறும், 2000 பேர் மட்டுமே அவரை பின்தொடர்ந்து வந்தனர். ஐபிஎல் துவங்கி 10 நாட்களில் அவரைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை, 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒரே நாளில் பிரியா வாரியம் பெற்ற வரவேற்பை, தற்போது மயாங்க் முறியடித்து வருகிறார்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Mumbai Indians new sensation Mayank Markande hit in the instagram
Story first published: Tuesday, April 17, 2018, 21:25 [IST]
Other articles published on Apr 17, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற