Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெஸ்ட் இண்டீஸை வெளுக்கப் போகும் இந்தியப் படை.. மயங்க், சிராஜ் உள்ளே.. தவான் அவுட்!

டெல்லி: இந்திய டெஸ்ட் அணியில் முதல் முறையாக இடம் பிடித்துள்ளனர் மயங்க் அகர்வால் மற்றும் முகம்மது சிராஜ் ஆகியோர். மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து ஷிகர் தவான் நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் இ[டையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தொடரில் மோசமாக ஆடியதால் மேற்கு இந்தியத் தீவுகள் தொடருக்கான வாய்ப்பை இழந்துள்ளார் ஷிகர் தவான்.

Mayank, Siraj get maiden call-up; Dhawan dropped from India squad for West Indies Tests

அதேசமயம், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியதால் மயங்க் அகர்வாலும், சிராஜும் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு இதுதான் முதல் டெஸ்ட் தொடராகும். அதேபோல புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆடி வருவதால் இவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

விராத் கோஹ்லி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில் வேகப்பந்து வீச்சில் முகம்மது ஷமி மட்டுமே அனுபவம் வாய்ந்த வீரர்.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் அக்டோபர் 4ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடைபெறும். 2வது போட்டி ஹைதராபாத்தில் அக்டோபர் 12 முதல் 16 வரை நடைபெறும்.

இந்திய அணி விவரம்:

விராத் கோஹ்லி, கே.எல். ராகுல், பிருத்வி ஷா, மயங்க் அகர்வால், சட்டேஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ஆர். அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகம்மது ஷமி, உமேஷ் யாதவ், முகம்மது சிராஜ், ஷர்துல் தாக்கூர்.

Story first published: Sunday, September 30, 2018, 12:13 [IST]
Other articles published on Sep 30, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+