ரெய்னாவிடம் வைஃபை பாஸ்வேர்ட் கேட்ட ஸ்டூவர்ட் பின்னி மனைவி மாயந்தி! என்ன ஆச்சு தெரியுமா?

Posted By:

கான்பூர்: கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவியும், டிவி வர்ணனையாளருமான மாயந்தி லேங்கர் சுரேஷ் ரெய்னாவிடம் வைஃபை பாஸ்வேர்ட் கேட்ட நிலையில் அதற்கு கிடைத்த பதில்களை பாருங்கள்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் நடுவேயான 3வது ஒரு நாள் போட்டி கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டி கவரேஜ்க்காக மாயந்தி அங்கு சென்றிருந்தார்.

அப்போது தனது போனில் வைஃபை செர்ச் செய்துள்ளார்.

வைஃபை பஞ்சாயத்து

வைஃபை பஞ்சாயத்து

வைஃபை செர்ச் செய்தபோது, சுரேஷ் ரெய்னா என்ற பெயரில் ஹாட்ஸ்பாட் இருந்தது தெரியவந்தது. சுரேஷ் ரெய்னா, உ.பி மாநில ரஞ்சி அணியில் ஆடி வருகிறார். கான்பூரில் அவர் அடிக்கடி விளையாடுவதுண்டு. எனவே அவரது பெயரில் ஹாட்ஸ்பாட் உள்ளது.

ரெய்னாவிடம் பாஸ்வேர்ட்

இதை பார்த்த மாயந்தி லாங்கர், சுரேஷ் ரெய்னா உங்கள் வைஃபை பாஸ்வேர்ட் கிடைக்குமா என்று டிவிட்டரில் கேட்டுள்ளார். செல்போன் படத்தை ஸ்கிரீன் ஷாட்டாக போட்டுள்ளார் மாயந்தி.

நெட்டிசன்கள்

இதற்கு ரெய்னாவிடமிருந்து பதிலே வரவில்லை. ஆனால் நெட்டிசன்கள் இதை பயன்படுத்தி ரெய்னாவை கலாய்க்க தொடங்கிவிட்டனர். ஒரு நெட்டிசன், பாஸ்வேர்ட் எம்எஸ்டி என்று இருக்கும் என கலாய்த்துள்ளார். டோணியின் செல்ல வீரர்களில் ரெய்னா ஒருவர்.

அந்த பந்து வேண்டாம்

ஷார்ட் பிட்ச் பந்துகளை போட்டுவிடாதீர்கள், ப்ளீஸ் என்பதுதான் ரெய்னா பாஸ்வேர்டாக இருக்கும் என கலாய்த்துள்ளார் இவர். இதற்கான காரணம் கிரிக்கெட் ஆட்டத்தை தொடர்ந்து பார்த்தோருக்கு தெரிந்திருக்குமே.

பவுன்சர்

இந்த நெட்டிசனும் அதையே வேறு வார்த்தையில் சொல்லி கலாய்த்துள்ளார். பவுன்சர்கள்.. என்று கூறியுள்ளார் இவர்.

Story first published: Tuesday, October 31, 2017, 18:52 [IST]
Other articles published on Oct 31, 2017
Please Wait while comments are loading...