Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த ஓவர் த்ரோ ரன்..? விசாரணை நடத்துவதாக எம்சிசி அறிவிப்பு..! இனி செஞ்சா என்ன, செய்யாட்டி என்ன?

லண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஓவர் த்ரோ விதி குறித்து ரிவ்யூ செய்யப்போவதாக எம்சிசி அதிரடியாக அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் சமீபத்தில் 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்தது. இறுதி போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்தை பவுண்டரிகள் அடிப்படையில் வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் கோப்பையை வென்றது.

அந்த போட்டி முதலில் டை ஆனது. பின்னர் சூப்பர் ஓவரும் டையில் முடிய, ரசிகர்கள் உச்சக்கட்ட டென்ஷன் நிலைக்கு தள்ளப்பட்டனர். சூப்பர் ஓவர் செல்வதற்கு முன்பாக, போட்டியின் கடைசி ஓவரில் ஒரு திருப்பம் நிகழ்ந்தது.

ஓவர் த்ரோ வீசினார்

ஓவர் த்ரோ வீசினார்

அந்த ஓவரில் நியூசிலாந்து வீரர் மார்டின் குப்தில், பவுண்டரி லைனில் இருந்து த்ரோ வீசினார். அப்போது ரன் எடுக்க ஓடி வந்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு, பவுண்டரிக்கு பறந்தது.

திருப்புமுனை சம்பவம்

திருப்புமுனை சம்பவம்

அந்த ஒரு வினாடி, உலக கோப்பையை மாற்றி எழுதியது. விதிகளின் படி 5 ரன்கள் தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அம்பயர் தர்மசேனா தவறாக 6 ரன்கள் வழங்கினார். இது மிகப்பெரிய திருப்பு முனையாக மாறியது.

இங்கி. சாம்பியன்

இங்கி. சாம்பியன்

இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. கோப்பையை இங்கிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த ஓவர் த்ரோ, அம்பயரின் பவுண்டரி முடிவு பல கேள்விகளையும், சர்ச்சைகளையும் எழுப்பியது.

எம்சிசி அறிக்கை

எம்சிசி அறிக்கை

இந்நிலையில் இந்த ஓவர் த்ரோ குறித்து விதிகளை ரிவியூ செய்ய மேரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து எம்சிசி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரிவ்யூ செய்யப்படும்

ரிவ்யூ செய்யப்படும்

அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: உலக கிரிக்கெட் கமிட்டி, உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பைனலில், நிகழ்ந்த ஓவர் த்ரோ குறித்து ரிவ்யூ செய்யப்படும். விதிகள் தெளிவாக இருந்த போதும், செப்டம்பரில் நடக்கும் கூட்டத்தில் ரிவ்யூ செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

Story first published: Tuesday, August 13, 2019, 21:41 [IST]
Other articles published on Aug 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+