Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆடிப்போன பவுலர்.. மிடில் ஸ்டெம்ப் சாய்ந்தும் அவுட் தராத நடுவர்.. கிரிக்கெட்டில் இப்படியொரு விதி!

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டியில் பந்துவீச்சாளர் ஸ்டம்பை பறக்கவிட்ட போதும், பைல்ஸ்-கள் கீழே விழாததன் காரணமாக பேட்ஸ்மேனுக்கு நாட் அவுட் கொடுத்த விவகாரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மை காலங்களாக வித்தியாசமான முறையில் பேட்ஸ்மேன்கள் அவுட் கொடுக்கப்பட்டு வந்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக உலகக்கோப்பை தொடரின் போது இலங்கை அணியின் மேத்யூஸ் தாமதமாக வந்ததன் காரணமாக அவுட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது பல்வேறு தரப்பினருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

MCC Rule : Middle Stump knocked back and the batsmen is still given not out by the umpire in Australia


இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரில் ஒன்றில் பேட்ஸ்மேன் போல்டாகி வெளியேறிய சூழலிலும், கடைசி நேரத்தில் நடுவர்கள் நாட் அவுட் என்று பேட்ஸ்மேனை மீண்டும் அழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஏசிடி பிரீமியர் கிரிக்கெட் தொடரில் கின்ண்டெர்ரா அணியை எதிர்த்து டைகர்ஸ் அணி விளையாடியது.

இந்த போட்டியில் கின்னிண்டெர்ரா அணியின் பவுலர் ஆண்டி ரெனால்ட்ஸ், டைகர்ஸ் அணியை சேர்ந்த பேட்ஸ்மேனான மேத்யூ-விற்கு பந்துவீசினார். அந்த பந்து மிடில் ஸ்டம்பை சாய்த்து சென்றது. இதன்பின் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் அந்த அணி வீரர்கள் கொண்டாட, ஆட்டமிழந்த சோகத்தில் பேட்ஸ்மேன் பெவிலியன் நோக்கி நடந்தார்.

ஆனால் திடீரென கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த அணி வீரர்கள், பைல்ஸ் கீழே விழாததால் நடுவரிடம் விசாரித்தனர். அதுவரை நடுவர்கள் தரப்பில் அவுட் முடிவு அளிக்கப்படவில்லை. இதனால் பெவிலியன் சென்ற பேட்ஸ்மேன் மீண்டும் க்ரீஸிற்குள் வந்து நின்றார். இதன்பின் ஆலோசித்த நடுவர்கள், பேட்ஸ்மேன் நாட் அவுட் என்று கூறினர். இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

எம்சிசி விதிமுறையின் போது பேட்ஸ்மேன் போல்டாகி ஆட்டமிழக்க வேண்டுமென்றால், இரு பைல்ஸ்-களில் நிச்சயம் ஒன்றாவது கீழே விழ வேண்டும். அல்லது ஒரு ஸ்டம்ப் மொத்தமாக தரையில் இருந்து பறக்க வேண்டும். இந்த விதியின் படி பார்த்தால், பேட்ஸ்மேனுக்கு நாட் அவுட் முடிவு வழங்கப்பட்டது சரியான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Monday, December 11, 2023, 12:27 [IST]
Other articles published on Dec 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+