Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷூ கழன்றது கூட தெரியாமல் சுழன்று.. சுழன்று அடித்த பிரெண்டன் மெக்கல்லம்!

ஆக்லாந்து: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில், ஷூ கழன்று போவது கூட தெரியாமல் சுழன்று, சுழன்று அடித்து நொறுக்கினார் நியூசிலாந்து வீரர் பிரெண்டன் மெக்கல்லம்.

உலக கோப்பை அரையிறுதி போட்டியில், தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 298 ரன் வெற்றி இலக்கை (டக்ஒர்த் லீவிஸ் விதிமுறைப்படி) 43 ஓவர்களில் எட்டிப்பிடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் நியூசிலாந்து பேட்டிங்கை தொடங்கியது.

McCullum jumps back to defend the ball but loses his shoes in the process

அணி கேப்டனும், அதிரடி வீரருமான பிரெண்டன் மெக்கல்லமும், மார்டின் கப்திலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஸ்டெயின் முதல் ஓவரை வீசினார். முதல் பந்தில் கப்தில் சிங்கிள் எடுக்க, 2வது பந்தை சந்தித்தார் மெக்கல்லம். அந்த பந்து நடு ஸ்டம்ப் திசையில் பிட்ச் ஆகி, அவுட் ஸ்விங் ஆனது. அதை பேக்ஃபுட் சென்று தடுத்தார் மெக்கல்லம். அப்போது அவரது இடது காலி்ல் மாட்டியிருந்த ஷூ தனியாக கழன்று ஓடியது.இதுமிகவும் அரிதான சம்பவமாகும். இப்படித்தான், நடப்பு உலக கோப்பை தொடரில் இலங்கை வீரர் ஜெயவர்த்தனே பேட் உடைந்ததும் சுவாரசியமாக பேசப்பட்டது.

மெக்கல்லம் ஷூ ஏன் தனியாக கழன்று ஓடியது என்று ரசிகர் ஒருவர் கூறிய கமெண்ட்தான் டாப். சாப்பிட கூட நேரம் கொடுக்காமல் இரண்டாவது பேட்டிங் தொடங்கியதால், அவசரத்தில் ஷூ லேஸ் கட்ட மறந்து வந்துவிட்டார் போலும் என்றார் அந்த ரசிகர்.

ஷூவை கழற்றி போட்டு சுழன்று, சுழன்று அடித்த மெக்கல்லம், 26 பந்துகளில், 59 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

Story first published: Tuesday, March 24, 2015, 14:08 [IST]
Other articles published on Mar 24, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+