பாகிஸ்தான் டீம் நிலைமையை சொல்ல இந்த ஒரு போட்டோ போதும்!
Recommended Video
லண்டன்: இந்திய அணி 336 ரன்களை குவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பாகிஸ்தான் தோற்றால் போதும், டிவிகளை போட்டு உடைக்க தயாராக உள்ளனர்.
ஏனெனில், இது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு புதிது கிடையாது. இதுவரை 6 முறை உலக கோப்பை தொடர்களில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் தோற்றுள்ளனர். அப்போதெல்லாம், அந்த நாட்டு ரசிகர்கள் சிலராவது, வீட்டிலுள்ள டிவிகளை போட்டு உடைத்துவிடுவார்கள்.

இதுகுறித்த வீடியோக்கள், மற்றும் புகைப்படங்கள் நமது நாட்டில் வைரலாக சுற்றி வரும். இந்த நிலையில், இந்தியா 300 ரன்களை கடந்துள்ளது மற்றும், இந்தியாவிடம் சிறப்பான பந்து வீச்சு அட்டாக் இருப்பது போன்றவற்றால் பாகிஸ்தான், இந்த போட்டியிலும், தோற்கப்போவது உறுதி என்று அந்த நாட்டு ரசிகர்கள் முடிவுக்கு வந்துவிட்டனர்.
எனவே இப்போதைய நிலையில், பாகிஸ்தான் நாட்டில், இப்படித்தான் டிவியை இரும்பு கம்பிகள் போட்டு, பாதுகாப்பாக வைத்திருப்பார்கள் என கேலி செய்கிறது இந்த ட்வீட். கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம் என்பார்கள். நாம் வெற்றிதான் நமக்கு கிடைக்க வேண்டும் என வேண்டிக்கொள்வோம். ஆனால் டிவிகளையும் பாகிஸ்தான் ரசிகர்கள் உடைத்துவிட கூடாது என்றும் விரும்புவோமாக.


Click it and Unblock the Notifications