For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தானின் "தெறி" பவுலர் மனைவிக்கு.. பிடித்த வீரர் "கிங்" கோலி - யார் இந்த ஷாமியா?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மருமகள் ஒருவரின் ஃபேவரைட் பேட்ஸ்மேன் இந்திய கேப்டன் விராட் கோலி தானாம்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலருக்கு பாகிஸ்தானிலும் ரசிகர்கள் உண்டு. சச்சின், கங்குலி, சேவாக், யுவராஜ், தோனி என்று இந்த லிஸ்ட் நீளும். அதேபோல், பாகிஸ்தான் வீரர்கள் சிலருக்கு இந்தியாவிலும் ரசிகர்கள் உண்டு. அதில் லேட்டஸ்ட் வரவு பாபர் அசம். இவருக்கென்று இந்தியாவில் தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

இந்த நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலி தான் உலகிலேயே தனக்கு மிகவும் பிடித்த பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார் பாக்., கிரிக்கெட் பவுலரின் மனைவி.

 ஷாமியோ அர்சோ

ஷாமியோ அர்சோ

ஹசன் அலி. பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர். இவர், 2019 உலகக் கோப்பைத் தொடருக்கு பிறகு, இந்தியாவைச் சேர்ந்த ஷாமியா அர்சோவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் துபாயில் நடந்தது. இதன் மூலம், ஜாகீர் அப்பாஸ், மோஷின் கான், சோயிப் மாலிக் ஆகியோர் வரிசையில் இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்ட நான்காவது பாகிஸ்தான் வீரரானார்.

 ஃபோட்டோஸ் வைரல்

ஃபோட்டோஸ் வைரல்

ஷாமியா அர்சோ ஹரியாவைச் சேர்ந்தவர். இவர் எமிரேட்ஸ் ஏர்லைனிசில் இன்ஜினியராக பணியாற்றுகிறார். குடும்பத்தார் டெல்லியில் வசிக்கின்றனர். திருமணத்துக்கு முன்பே, இவரின் போட்டோக்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. இவரின் சடங்குகள் அடங்கிய போட்டோக்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் கூட வைரலானது.

 பேவரைட் பேட்ஸ்மேன்

பேவரைட் பேட்ஸ்மேன்

இந்த நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் ஃபாலோயர்ஸ்களுடன் சாட் செய்த ஷாமியா, ரசிகர் ஒருவரின் 'பேவரைட் பேட்ஸ்மேன் யார்?' என்ற கேள்விக்கு விராட் கோலி என்று பதில் அளித்துள்ளார். இதனால், கோலி ரசிகர்கள் ஏக குஷியில், அவரது அந்த பதிலை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

 மனம் திறந்து ஓப்பனாக

மனம் திறந்து ஓப்பனாக

ஏற்கனவே பார்ப்பதற்கு நடிகை போன்று இருக்கும் ஷாமியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில், இப்போது விராட் கோலி தனக்கு பிடித்த பேட்ஸ்மேன் என்று சொல்லி, ஏகப்பட்ட இந்திய ரசிகர்களையும் தனது ஃபாலோயர்ஸ் ஆக்கிவிட்டார். அதுமட்டுமின்றி, கணவர் ஹசன் அலி பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருந்தாலும், மனம் திறந்து ஓப்பனாக கோலியைத் தான் பிடிக்கும் என்று கூறியிருப்பதற்கு வழக்கம் போல் ஆதரவு, எதிர்ப்பு என்று மாறி மாறி டிவீட்கள் பறந்து வருகின்றனர். விளையாட்டை விளையாட்டா பாருங்கப்பா!

Story first published: Tuesday, June 8, 2021, 15:50 [IST]
Other articles published on Jun 8, 2021
English summary
Meet Kohli Pakistani Fangirl Samiya hasan ali - விராட் கோலி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+