Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவரும் "சூப்பர் ஸ்டார்"தானாம்..!

மெல்போர்ன்: ஆஸ்திதிரேலிய கிரிக்கெட்டிலும் ஒரு சூப்பர் ஸ்டார் இருக்கிறார். இந்த சூப்பர் ஸ்டார் மகளிர் அணியின் அசைக்க முடியாத வீராங்கனை மெக் லேனிங்.

பார்க்க சின்னப் பொண்ணு போல இருந்தாலும் பவர் புல் வீராங்கனையாம். இந்த சிறிய வயதிலேயே உள்ளூர் அளவிலும், சர்வதேச அளவிலும் பல சாதனைகளைப் படைத்து வைத்துள்ளார்.

சிரித்தால் தென்றல் போலத் தெரியும் இவர், ஆட்டக் களத்தில் இறங்கி விட்டால் புயலாக வெளுத்து வாங்குகிறார். 2008ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார் மெக் லேனிங். அப்போது அவருக்கு வயது 16தான்,

வாங்காத பாராட்டு இல்லை

வாங்காத பாராட்டு இல்லை

இவர் வாங்காத விருது இல்லை என்று கூறும் அளவுக்கு ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்துள்ளாராம். உள்ளூர் அளவிலும், தேசிய அளவிலும் ஏகப்பட்ட விருதுகள் இவர் வசம் உள்ளன.

2012 20-20 உலகக்கோப்பையில்

2012 20-20 உலகக்கோப்பையில்

2012ல் நடந்த டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன் குவித்த வீராங்கனைகள் வரிசையில் இவருக்கு 3வது இடம் கிடைத்தது. மேலும் முதல் ஐந்து டுவென்டி 20 போட்டிகளில் தொடர்ந்து 30க்கு ரன்களுக்கு மேல் குவித்த வீராங்கனையாகவும் இவர் அசத்தினார்.

அதி வேக அரை - சதம்

அதி வேக அரை - சதம்

2012-13ல் தனது 20 வயதில் ஒரு நாள் போட்டிகளில் அதி வேக அரை சதம் மற்றும் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார். ஆஸ்திரேலியா அளவிலான சாதனை இவை. அதில் 23 பந்துகளில் அரை சதத்தையும், 45 பந்துகளில் சதத்தையும் போட்டு கலக்கினார்.

2014 முதல் கேப்டன்

2014 முதல் கேப்டன்

2014ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஒரு நாள் போட்டிகளுக்கான மகளிர் கேப்டனாக பொறுப்பேற்றார் லேனிங். அன்று முதல் தொடர்ந்து சாதித்து வருகிறார். இப்போது உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு வந்துள்ளார். கோப்பையுடன் தான் திரும்புவோம் என்று தம் கட்டிக் கூறுகிறார்.

இவரை ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் என்று அங்குள்ளவர்கள் கொண்டாடுகிறார்கள்.

Story first published: Wednesday, June 21, 2017, 17:46 [IST]
Other articles published on Jun 21, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+