Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொரோனா பாதிப்பு... மெல்போர்னுக்கு மாற்றப்படும் 3வது டெஸ்ட்.. நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வரும் சனிக்கிழமை துவங்கவுள்ளது.

சிட்னியில் ஜனவரி 7ம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அங்கு கொரோனா பரவல் காரணமாக போட்டி நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் 3வது போட்டி மெல்போர்னில் நடத்த மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

3வது டெஸ்ட் நடப்பதில் சிக்கல்

3வது டெஸ்ட் நடப்பதில் சிக்கல்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் இரண்டாவது டெஸ்ட் மெல்போர்னிலும் 3வது டெஸ்ட் சிட்னியிலும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிட்னியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படுவதால் அங்கு 3வது டெஸ்ட் நடத்தப்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

சிக்கலில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா

சிக்கலில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா

இதையடுத்து மெல்போர்னிலேயே 3வது டெஸ்ட் போட்டியை நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. சிட்னியில் வரும் 7ம் தேதிக்குள் நிலைமை கட்டுக்குள் வரும் நிலையில், அங்கேயே போட்டியை தொடரவும் திட்டமிட்டுள்ளது. ஆயினும் சிட்னியில் போட்டியை நடத்துவதில் மேலும் ஒரு சிக்கல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை

வீரர்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை

சிட்னியில் கொரோனா பரவல் உள்ளதால் குயின்ஸ்லாந்து தன்னுடைய சிட்னிக்கான எல்லையை மூடியுள்ளது. இதையடுத்து சிட்னியில் இருந்து அங்கு வீரர்கள் செல்வது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் 4வது போட்டியை பிரிஸ்பேனில் நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீரர்களுக்கு விலக்கு அளிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

குழு முயற்சி

குழு முயற்சி

இந்நிலையில் போட்டியில் விளையாடுபவர்கள் மற்றும் ஊழியர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அனைவருடைய சுகாதாரத்தையும் கருத்தில் கொண்டு குழு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

Story first published: Thursday, December 24, 2020, 17:27 [IST]
Other articles published on Dec 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+