மெல்போர்ன் போட்டியில் ஏபி டிவில்லியர்ஸின் சாதனையை முறித்த கோஹ்லி
மெல்போர்ன்: மெல்போர்னில் இன்று நடைபெறும் 3வது ஒரு நாள் போட்டியில் விராத் கோஹ்லி புதிய சாதனை ஒன்றை படைத்தார். சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதி வேகமாக 7000 ரன்களைப் பூர்த்தி செய்த வீரர் என்ற சாதனையை வில்லியர்ஸிடமிருந்து இன்று பறித்தார் கோஹ்லி.
முதல் இரு ஒரு நாள் போட்டிகளில் தோல்வியுற்ற இந்திய அணி இன்று தனது 3வது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய முனைப்புடன் ஆடி வருகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் இந்தியாவை பேட் செய்யப் பணித்தது. இதையடுத்து இந்தியா பேட் செய்தது. இதில் விராத் கோஹ்லி புதிய சாதனை படைத்தார்.

7000 ரன்கள்
அதி வேகமாக ஒரு நாள் போட்டிகளில் 7000 ரன்களைக் குவித்த வீரர் என்ற சாதனையை இதே ஆஸ்திரேலியாவில்தான் டிவில்லியர்ஸ் படைத்திருந்தார்.

சாதனை முறியடிப்பு
தற்போது இந்த சாதனையே இதே ஆஸ்திரேலியாவில் வைத்து கோஹ்லி முறியடித்துள்ளார். குறைந்த இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைச் செய்துள்ளார் கோஹ்லி.

161 இன்னிங்ஸ்களில்
அதாவது 169வது போட்டியில் ஆடிய கோஹ்லி, 7000 ரன்களை தனது 161வது இன்னிங்ஸில் பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளார்.

166ல் சாதித்த டிவில்லியர்ஸ்
இதே சாதனையை டிவில்லியர்ஸ் தனது 166வது இன்னிங்ஸில் நிகழ்த்தினார். அப்போட்டியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனையாளர்கள் பட்டியல்
ஒரு நாள் போட்டிகளில் அதி வேகமாக 7000 ரன்களைக் குவித்த சாதனையாளர்கள் - கோஹ்லி 161 இன்னிங்ஸ்கள், வில்லியர்ஸ் 166, கங்குலி 174, பிரையன் லாரா 183, டெஸ்மான் ஹெய்ன்ஸ் 187.


Click it and Unblock the Notifications