Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜிம்பாப்வே பெண் பலாத்காரம்.. இந்திய கிரிக்கெட் வீரர் கைதானதாக பரபரப்பு.. வெளியுறவுத்துறை மறுப்பு

ஹராரே: ஜிம்பாப்வேயில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அதுகுறித்து வெளியுறவுத்துறை அதிகாரிகள் விளக்கம் கூறியுள்ளனர்.

டோணி தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து ஆடி வருகிறது.

3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்ற நிலையில், நேற்று நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.

நட்சத்திர ஹோட்டல்

நட்சத்திர ஹோட்டல்

அடுத்த டி20 போட்டிக்காக இந்திய வீரர்கள் தயாராகி வருகிறார்கள். ஹராரேயிலுள்ள மெய்க்லஸ் என்ற நட்சத்திர ஹோட்டலில் இந்திய வீரர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பல நிர்வாகிகள்

பல நிர்வாகிகள்

இந்திய வீரர்களுடன், ஸ்பான்சர் நிறுவன அதிகாரிகள், உதவி அதிகாரிகள் என பல தரப்பட்டவர்களும் அதே ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாலியல் புகார்

பாலியல் புகார்

இந்நிலையில், ஜிம்பாப்வே பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின்பேரில் இந்த ஹோட்டலில் இருந்து ஒருவரை போலீசார் கைது செய்துள்ள தகவல் இன்று மதியம் இந்திய ஊடகங்களுக்கு கிடைத்தது.

கிரிக்கெட் வீரர்

கிரிக்கெட் வீரர்

வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டல் என்பதால் கைது செய்யப்பட்டது அணி வீரர்களில் யாராவது ஒருவராகத்தான் இருக்கும் என்ற யூகத்தின் அடிப்படையில், கிரிக்கெட் வீர்ர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வேகமாக பரவின.

இல்லை என மறுப்பு

இல்லை என மறுப்பு

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்களில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்திலுள்ள பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரிகள் ஊடக நிறுவனங்களிடம் தெரிவித்தனர்.

கைது உண்மை

கைது உண்மை

கைது செய்யப்பட்டது, இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர் நிறுவன நிர்வாகிகளில் ஒருவர் என தெரியவந்துள்ளது. அவரும் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மரபணு சோதனை நடத்தி உண்மையை வெளியே கொண்டுவாருங்கள், நான் சோதனைக்கு தயார் என அவர் கூறியுள்ளார். சம்பவத்தில் தொடர்புடையோர், பெயர் விவரங்களை வெளியிடாமல் கிரிக்கெட் நிர்வாகங்கள் மவுனம் காக்கின்றன.

Story first published: Monday, June 20, 2016, 11:32 [IST]
Other articles published on Jun 20, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+