Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டேய் எப்படிறா பைனலுக்கு வந்தோம்.. இந்தியா, பாக். அணிகளை கலாய்க்கும் நெட்டிசன்கள்.. மீம்ஸ் விருந்து !

டி20 உலக கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில் வியாழக்கிழமை நடைபெறும் இரண்டாவது அறையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்து பல பரிட்சை நடத்துகின்றன.

பரபரப்பான ஆட்டங்கள் நடைபெற்றாலும் நமது மீம் கிரியேட்டர்கள் இதையே கன்டென்ட் ஆக்கி பல மீம்ஸ்களை போட்டு தாக்கி வருகின்றனர்.

நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் எப்போதும் சிரித்துக் கொண்டு இருப்பார். தோல்வியிலும் சிரிப்பார், வெற்றியிலும் சிரிப்பார்.

தோல்வியிலும் சிரிப்பு

தோல்வியிலும் சிரிப்பு

இந்த நிலையில் நேற்று அறையிறுதியில் தோல்வி அடைந்த பிறகும் வில்லியம்சன் சிரித்துக் கொண்டு பேட்டி அளித்தார் . அதனை போட்டுள்ள நெட்டிசன்கள் நம்மிடம் பணம் இருந்தால் எடுத்துக் கொள்வார்கள், பதவி இருந்தா பறித்து விடுவார்கள். ஆனால் தோல்வியை கண்டு அசராம சிரிக்கிற இந்த குணத்தை மட்டும் யாராலயும் எடுத்துக்கவே முடியாது என்று அசுரன் தனுஷை வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர்.

கில்லி மீம்ஸ்

கில்லி மீம்ஸ்

இதைத் தொடர்ந்து கில்லி படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் நடைபெறும் கபடி போட்டியை வைத்து மீம் கிரியேட்டர்கள் இந்த மீமை போட்டுள்ளனர். அதில் இறுதி ஆட்டத்தில் ஆசிய அணிகள் தான் விளையாட வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் நினைப்பது போலவும், அப்போது முதல் அரை இறுதி ஆட்டத்தில் எப்படியாவது நியூசிலாந்தை பாகிஸ்தான் வீழ்த்த வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை கொடுப்பது போலவும். அதே மாதிரி பாகிஸ்தான் வென்றதும், இரண்டாவது அணியாக இந்தியா நுழைய காத்திருப்பது போலவும் மீம் போட்டு கலக்கியுள்ளனர்.

எப்படி டா சிறுவன்

எப்படி டா சிறுவன்

தற்போது சமூக வலைத்தளத்தில் இரண்டு நாட்களாக இந்த சிறுவன் தான் ஆக்கிரமித்து வருகின்றான். கையில் ரப்பர் பேண்டை மாட்டிக்கொண்டு மேஜிக் செய்வதாக இது சிறுவன் செய்து , அதன் பிறகு எப்படிறா என்று கேட்கும் முகபாவனை தான் தற்போது நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த சிறுவனை பாகிஸ்தான் போல் சித்தரித்து எப்படிடா நம்ம பைனலுக்கு வந்தோம் என்று பாகிஸ்தான் யோசிப்பது போல் இந்த மீமை அமைத்துள்ளனர்.

பயப்படும் புவனேஸ்வர்

பயப்படும் புவனேஸ்வர்

இந்தியா இங்கிலாந்து அணிகள் இரண்டாவது அரை இறுதியில் மோத உள்ள நிலையில் சந்திரமுகி படத்தில் வடிவேலு சிங்கம், புலி ஆகிய பொம்மைகளை பார்த்து வேட்டைய ராஜா அரண்மனையில் பயப்படும் காட்சியை புவனேஸ்வர் குமாரனும் ஒப்பிட்டு மீம் போட்டுள்ளனர். அதில் புவனேஸ்வர் குமார் பட்லர், அலெக்ஸ் ஹெல்ஸ், மொயின் அலி , லிவிங்ஸ்டோன், ஸ்டோக்ஸ் போன்ற அபாயகரமான பேட்ஸ்மேன்களை கண்டு புவனேஸ்வர் குமார் அஞ்சுவது போல் இந்த மீம் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்பெசலிஷ்ட

ஸ்பெசலிஷ்ட

இதேபோன்று 1992 மற்றும் 2022 ஆகிய இரண்டு உலகக்கோப்பை போட்டிகள் ஒரே மாதிரி நடைபெறுவதாக நாமே செய்தி ஒன்று வெளியிட்டுள்ளோம். அதன்படி இங்கிலாந்து அணி இந்தியாவிடம் 92 உலகக்கோப்பை ஸ்கிரிப்ட் படி பார்த்தால் நாங்கள் தான் அரை இறுதியில் வெற்றி பெறுவோம்.. நீங்கள் தோற்கப் போகிறீர்கள் என்று கேட்பது போலவும், அதற்கு இந்தியா அந்த ஸ்கிரிப்ட் மாற்றி எழுவதில் தான் நாங்கள் ஸ்பெசலிஸ்ட் என்று சர்க்கார் படத்தில் விஜய் பேசுவது போலும் மீம் போட்டு இருக்கிறார்கள்.

Story first published: Thursday, November 10, 2022, 6:05 [IST]
Other articles published on Nov 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+