சென்னை: மீன்பிடிக்க, கொக்கியில் புழுவை வைத்துக் கொண்டு காத்திருப்பவர்கள் போலத்தான் இந்த மீம் கூட்டத்தினரும். வசமாக யாராவது சிக்கினால் மீம் போட்டுத் தள்ளி விடுவார்கள்.
இப்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை வைத்து சில மீம்கள் உலா வருகின்றன.
வங்ககதேசம் சென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் டுவென்டி 20 தொடரில் ஆடியது. ஆடிய 2 போட்டிகளிலும் அது அழகாக வென்று.

அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் தொடங்கியது. முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அருமையாக வென்றது.
ஆனால் 2வது போட்டியில்தான் சறுக்க விட்டது. அதாவது 7 விக்கெட் வித்தியாசத்தில் படு தோல்வியைத் தழுவியது.
அவ்வளவுதான் இதற்குத்தானே காத்திருந்தோம் பால குமாரா என்ற ரேஞ்சுக்கு தென் ஆப்பிரிக்காவை கேலி செய்து மீம் போட ஆரம்பித்து விட்டனர் நம்மவர்கள்.
வழக்கம் போல வடிவேலுதான் இந்த மீமிலும் நாயகன்.
ஒரு படத்தில் வடிவேலுவை சுற்றி வளைத்து சாணியால் அடிப்பார்களே.. ஞாபகம் உள்ளதா.. அந்த ஜோக்கை வைத்துத்தான் இந்த மீமும். கடைசியில் ஒரு தாதாவைக் கூட்டி வந்து நட்ட நடுவில் நிறுத்தி அவரது தலையையும் சேர்த்து அசிங்கப்படுத்தி விடுவார்கள் சாணி வீச்சாளர்கள். அந்தக் கதைதான் இந்த மீமிலும் திரைக்கதையாக உள்ளது.
அந்த தாதாதான் இங்கு தென் ஆப்பிரிக்க அணியாம். வடிவேலுதான் இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்களாம். தாதாவைப் பார்த்து அதாவது தென் ஆப்பிரி்க்காவைப் பார்த்து இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் இப்படிக் கேட்கிறார்கள்.. குருநாதா உங்களுக்கு வேற ஐட்டம் போல...!
நல்ல மீம்தான்..!