Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீதான்யா ஃபினிஷர்.. ராஜஸ்தான் சோலியை முடித்த சிம்ரன்.. ஹெட்மயரை கலாய்க்கும் மெர்சல் மீம்ஸ்!

டெல்லி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் டெல்லி அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது, ராஜஸ்தான் அணி 1 ரன்னை மட்டுமே சேர்த்து ஆட்டத்தை சூப்பர் ஓவருக்கு கொண்டு சென்றது. இந்த போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து சோசியல் மீடியாவில் உருவாக்கப்பட்டுள்ள தரமான மீம்ஸை பார்க்கலாம்.

வெண்ணிலா கபடிக் குழு படத்தில் பரோட்டா போட்டியில் பங்கேற்க நாங்கள் வரலாமா என்று சூரி கேட்பார். அதற்கு சப்ளையர் அதிக எடை உள்ள ஒருவரை பார்த்து, "இவனை தவிர யாரு வேணாலும் போட்டியில கலந்து கொள்ளலாம்" என்று பதில் அளிப்பார். அதனை சப்ளையராக ராகுல் டிராவிட்டையும், அதிக எடை கொண்டவராக தீக்சனாவையும் மாற்றி, "இவனை தவிர வேற யாரு வேணாலும் ஃபீல்டிங் செய்ய போகலாம்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் மொமண்ட்.

ipl 2025 memes Shimron Hetmyer Sanju Samson

வெற்றிக்கொடிகட்டு படத்தில் வங்கி ஊழியர் பார்த்திபனை பார்த்து, "ஜாமீன் கையெழுத்து போடுறதுக்கும் ஒரு மனசு வேணும்.. நீங்க அவருக்கு தான் நன்றி சொல்லணும்" என்று வடிவேலுவை காண்பிப்பார். இதில் வரும் வடிவேலுவாக ஸ்டார்க்கையும், பார்த்திபனாக அக்சர் படேலையும், வங்கி மேனேஜராக ரசிகர்களையும் மாற்றி, "நீங்க அவருக்குதான் நன்றி சொல்லணும்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் என்ன தவம் செஞ்சிபுட்டோம் மொமண்ட்.

ipl 2025 memes Shimron Hetmyer Sanju Samson

ரெண்டு படத்தில் கோயிலில் சில்மிஷம் செய்யும் ஒருவரின் மண்டையை தாம்பூலத்தால் அடித்து உடைக்கும் வடிவேலு, அவருக்கு பயந்து கொண்டு அமைதியாக நிற்பார். அப்போது குள்ளமாக வரும் நபர், "அண்ணே.. கை கொடுங்க.. அட.. கையை கொடுங்கண்ணே.. ஒரு மாமிச மலையையே சாச்சுபுட்டீங்களே அண்ணே" என்று மாட்டிவிடுவார். இதில் வரும் வடிவேலாக ஹெட்மயரையும், அடி வாங்கும் நபராக சஞ்சு சாம்சனையும், குள்ளமாக வரும் நபராக டெல்லி அணியையும் மாற்றி, "ராஜஸ்தான் அணியையே சாச்சுபுட்டீங்களே அண்ணே" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் கையை கொடுங்க சகல மொமண்ட்.

ipl 2025 memes Shimron Hetmyer Sanju Samson

சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் எஸ்ஜே சூர்யா பேசும்போது, "அஜித் சார் இல்லனா.. நிச்சயமாக இந்த இடத்திற்கு என்னால் வந்திருக்க முடியாது" என்று சொல்வார். எஸ்ஜே சூர்யாவை அக்சர் படேலாக மாற்றி, "ஸ்டார்க் இல்லனா.. நிச்சயமாக இந்த வெற்றி எங்களுக்கு இல்ல" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் என் நண்பனுக்கு நான்தான்டா செய்வேன் மொமண்ட்.

ipl 2025 memes Shimron Hetmyer Sanju Samson

வாமனன் படத்தில் ஊர்சிவசியிடம் ஜெய், ஆண்டி.. உங்களுக்கு நல்லா சமைக்க தெரிஞ்ச ஒரு பெண் தெரியுமா என்று கேட்பார். அதற்கு ஊர்வசி, "மத்தவங்களுக்கு எப்படினு தெரியல.. ஆனா என் பிரண்ட்ஸ் கிட்ட கேட்டா என்னதான் சொல்லுவாங்க" என்று பதில் கூறுவார். இதில் வரும் ஊர்வசியை ஹெட்மயராக மாற்றி, "மத்தவங்களுக்குலாம் எப்படினு தெரியலை.. ஆனால் ராஜஸ்தான் கிட்ட ஃபினிஷர் யாருனு கேட்டா என்னதான் சொல்லுவாங்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோலியை முடிஞ்சிட்டியே பங்காளி ரகம்.

Story first published: Thursday, April 17, 2025, 10:39 [IST]
Other articles published on Apr 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+