Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாழ்க்கை ஒரு வட்டம்டா.. ரிஷப் பண்ட் கிட்ட மாட்டிக்கொண்ட கொயங்கா.. தெறிக்கவிடும் கேஎல் ராகுல் மீம்ஸ்!

லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா மற்றும் கேஎல் ராகுல் சந்திப்பு ரசிகர்களிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உருவாக்கியுள்ள மீம்ஸை பார்க்கலாம்.

தூள் படத்தில் விவேக் உடற்பயிற்சி செய்து ரீமே சென்னிடம் சீன் போட்டுக் கொண்டிருக்கும் போது, திடீரென உள்ளே புகுந்து பறவை முனியம்மா, "இந்த கண்டிராவியத்தான் ராத்திரி பூராவும் உட்கார்ந்து ஒட்டிட்டு இருந்தியா" என்று உடற்பயிற்சி சாதனங்களை தூக்கி எறிந்துவிடுவார். அதனை அப்படியே தாமதமாக களமிறங்கிய ரிஷப் பண்ட் உடன் ஒப்பிட்டு, விவேக்காக லக்னோ அணியையும், பறவை முனியம்மாவாக முகேஷ் குமாரையும் மாற்றி, "இவனை இறக்கத்தான் இவ்வளவு சீன் போட்டிங்களா" என்று 2 பந்தில் வீழ்த்தி அனுப்பியதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு மொமண்ட்.

ipl 2025 memes KL Rahul

மின்சார கண்ணா படத்தில் வரும் வில்லன் மன்சூர் அலிக்கான், "எரியுது.. என் வயிறு கபகபனு எரியுது" என்று சொல்வார்.. இதில் வரும் மன்சூர் அலிக்கானாக லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்காவை மாற்றி, கேஎல் ராகுல் கடைசி வரை நின்று லக்னோ அணியை வீழ்த்தியதை பார்த்து, "எரியுது.. என் வயிறு கபகபனு எரியுது" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஐயோ பாவம் மொமண்ட்.

ipl 2025 memes KL Rahul

சத்ரபதி படத்தில் பெண் ஒருவரை பிடிக்க செல்லும் வடிவேலு, தனது யூனிஃபார்மை அவரிடம் இழந்துவிடுவார். இதன்பின் பாவாடை ஒன்றை கட்டிக் கொண்டு வடிவேலு வெளியில் வருவார். இதில் வரும் வடிவேலுவாக ரிஷப் பண்ட்-ஐ மாற்றி, "எலேய் ரிஷப் பண்ட்.. கூச்சப்படாம பேட்டிங் ஆட வா.. நாங்க யாரும் ட்ரால் செய்ய மாட்டோம்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா மொமண்ட்.

ipl 2025 memes KL Rahul

7ஜி ரயின்போ காலணி படத்தில், ரவி கிருஷ்ணாவை பார்த்து சோனியா அகர்வால், "சார் இவன்கிட்ட ஒரு ஸ்பெஷல் டேலண்ட் இருக்கு.. ஒரு பைக்கை பிரிச்சு அப்படியே திரும்ப அசம்பிள் பண்ணிருவான்" என்று சொல்வார். அதில் வரும் ரவி கிருஷ்ணாவாக ரிஷப் பண்ட்-ஆக மாற்றி, "சார் இவன்கிட்ட ஒரு ஸ்பெஷல் டேலண்ட் இருக்கு.. டெஸ்ட்ல டி20 மாதிரி ஆடுவாரு.. டி20ல டெஸ்ட் கிரிக்கெட் மாதிரி ஆடுவாரு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பைத்தியமா இவன் மொமண்ட்.

ipl 2025 memes KL Rahul

திருமலை படத்தில் ஜோதிகாவின் அப்பாவிடம் விஜய், "வாழ்க்கை ஒரு வட்டம்டா.. ஜெயிக்கிறவன் தோற்பான்.. தோற்பவன் ஜெயிப்பான்" என்று பஞ்ச் டயலாக் பேசுவார். அதில் வரும் விஜயாக கேஎல் ராகுலையும், ஜோதிகாவின் அப்பாவாக சஞ்சீவ் கொயங்காவையும் மாற்றி, "வாழ்க்கை ஒரு வட்டம்டா" என்று கேஎல் ராகுல் சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பக்கா மாஸ்.

ipl 2025 memes KL Rahul
Story first published: Wednesday, April 23, 2025, 7:49 [IST]
Other articles published on Apr 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+