Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கல்யாணத்திற்கு ரெடி ஆகுங்க .. சுப்மான் கில்லை அழைக்கும் சச்சின்.. இணையத்தில் தெறிக்கும் மீம்ஸ்

ஐதராபாத் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் சுப்மான் கில் இரட்டை சதம் விளாசியதை அடுத்து இணையத்தளத்தில் மீம்ஸ்களை ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

சச்சின் டெண்டுல்கரின் மகளைன சாரா டெண்டுல்கருடன், சுப்மான் கில் சுற்றி வருவதாகவும், இதற்கு சச்சின் நோ சொல்லி விட்டதாகவும் முன்பு செய்திகள் பரவின.

இதற்கு தகந்தார் போல் சுப்மான் கில் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும் என்றும் சச்சின் கூறி இருந்தார். இந்த நிலையில் சுப்மான் கில் சதம், சமாக விளாசி வருகிறார்.

திருமணம்

இதனை கலாய்த்து தற்போது நெட்டிசன்கள் மீம்ஸ்களை போட்டு கலாய்த்து வருகிறார்கள். சுப்மான் கில், பேட்டிங்கில் தனது திறமையை நிரூபித்த பிறகு, சச்சின் டெண்டுல்கர் தனது மகளுடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டதாக கூறி கலாய்த்து வருகின்றனர். மற்றொரு மீமிஸ்களில் சுப்மான் கில்லை பார்த்து சச்சின் பெருமைப்படுவதாகவும் கலாய்த்துள்ளார்கள்.

சச்சின் அனுமதி ?

இதே போன்று சுப்மான் கில்லுடன் தனது மகள் சாரா பழகுவதற்கு சச்சின் டெண்டுல்கர் அனுமதி மறுத்ததாகவும், தற்போது, சுப்மான் கில் பேட்டிங்கில் கலக்கி வருவதை பார்த்து , சச்சினே அனுமதி அளிப்பது போல் மீம்ஸ் போட்டுள்ளனர். பிரபல பாலிவுட் திரைப்படமான டிடிஎல்ஜேவில் டிம்ப்ளேட்டை பயன்படுத்தி, மகளின் காதலுக்கு சச்சின் பச்சை கொடி காட்டி விட்டதாக கூறியுள்ளனர்.

தயாராகும் சாரா

மற்றொரு மீம்சில் சாரா டெண்டுல்கர், சுப்மான் கில்லுடன் பேசுவதை நிறுத்தி விட்டதாக தகவல் வெளியானது. தற்போது சுப்மான் கில் இரட்டை சதம் அடித்த உடன், அவரை பார்ப்பதற்கு மேக் அப் எல்லாம் போட்டு சாரா டெண்டுலகர் தயராகும் வகயில், அவருடைய இன்ஸ்டா ரீலையே போட்டு கலாய்த்து வருகின்றனர்.

போட்டி போடும் காதலிகள்

சாரா டெண்டுலகருடன் விரிசல் ஏற்பட்ட நிலையில், சுப்மான் கில்லும் பாலிவுட் நடிகை சாரா அலி கானும் ஒன்றா சேர்ந்து டேட்டிங் செய்வதாக செய்திகள் வந்தது. தற்போது சுப்மான் கில் இரட்டை சதம் அடித்ததை அடுத்து, சாரா டெண்டுல்கரும் போட்டிக்கு வந்திருப்பதாக பொன்னியின் செல்வனில் திரிஷா, ஐஸ்வர்யா ராய் நேருக்கு நேர் நிற்கும் டிம்ப்ளேட்டை மீம் கிரியேட்டர்ஸ் பயன்படுத்தி இருக்கிறார்கள். மற்றாரு டிவிட்டர் பதிவில் , சாரா அலி கானுக்காக ஒரு சதமும், சாரா டெண்டுல்கருக்காக மற்றொரு சதம் என சுப்மான் கில் இரட்டை சதத்தை அடித்திருப்பதாக கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Wednesday, January 18, 2023, 20:18 [IST]
Other articles published on Jan 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+