மும்பை : இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது நாள் ஆட்டம் மழையால் ரத்தாகி இருக்கலாம். இதனால் ரசிகர்கள் கடும் சோகத்தில் இருந்து இருப்பார்கள்.
ஆனால் தங்களுடைய சோகத்தை மீம்ஸ் ஆக போட்டு தெறிக்க விட்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். குறிப்பாக மழை பெய்து கொண்டிருந்தபோது ரோகித் சர்மா நேற்று கொடுத்த ரியாக்சன் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

எப்படி நம்ம விண்ணர் படத்தில் வடிவேலு மாடியில் இருந்து பிரசாந்தை பார்த்து என்ன தம்பி என்ன ஆச்சு என்று கேட்பாரோ அதேபோல நேற்று மழை பெய்து கொண்டிருந்தபோது ஆட்டம் நடக்குமா இல்லையா என்பது குறித்து கேட்பதற்காக ரோஹித் சர்மா ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து எட்டிப் பார்த்து ஒரு ரியாக்ஷன் கொடுத்தார். அதுதான் தற்போது ஹாட் டாபிக்காக இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை முதலே மழை பெய்து வந்தது. இதனால் முதல் செஷனில் ஒரு பந்து கூட வீச முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது மதிய நேரத்தில் மழை நின்றது.ஆடுகளமும் காய்ந்த நிலையில் இருந்தது. இதனால் போட்டி தொடங்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் நடுவர்கள் மதிய உணவை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள்.

இது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது. இதனை விமர்சிக்கும் வகையில் வடிவேலுவை வைத்து மீம்ஸ் போட்டு இருக்கிறார்கள். இதேபோன்று நேற்றைய ஆட்டத்தில் 98 ஓவர்கள் கைவசம் இருந்த நிலையில், இந்திய அணிக்கு எட்டு விக்கெட் தேவைப்பட்டது. ஆனால் எங்களுக்கு 98 ஓவர்கள் எல்லாம் தேவையில்லை. இரண்டு செஷன் போதும் என்பதை மாசாக சர்பட்டா பரம்பரை படத்தில் வரும் வசனத்தை வைத்து மீம்ஸ் போட்டு இருக்கிறார்கள்.
இதேபோன்று ஆசஸ் தொடரும் மழையால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால் இங்கிலாந்து ரசிகர்கள் நாங்கள் வெல்ல வேண்டிய ஆட்டம் இப்படி ஆகிவிட்டது என்று அழும் நிலையில் அவர்களுக்கு இந்திய ரசிகர்கள் இதற்கெல்லாம் அழத் தொடங்கினால் நாங்கள் மாதக்கணக்கில் அழ வேண்டியது இருக்கும். மழையால் நாங்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று இந்திய ரசிகர்கள் மீம்ஸ் போட்டு இருக்கிறார்கள்.

எப்போதுமே இங்கிலாந்தில் மழை பெய்து பலமுறை இங்கிலாந்து அணி காப்பாற்றப்பட்டிருக்கிறது. தற்போது முதல் முறையாக மழையால் இங்கிலாந்து அணிக்கே பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனை வைத்து அந்நியன் படம் மீம்சை போட்டு ரசிகர்கள் கிண்டல் அடித்திருக்கிறார்கள். எரியுதா இப்படி தானே எங்களுக்கும் இத்தனை வருஷமா இருந்திருக்கும் என்று அவர்கள் கிண்டல் அடித்துள்ளனர்.
