லக்னோ: நேற்று நடைபெற்ற இரு ஐபிஎல் போட்டிகளை வைத்தும் ரசிகர்கள் உருவாக்கி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி மீம்ஸ் பற்றி பார்க்கலாம்.
16வது ஐபிஎல் சீசனில் லக்னோ அணி தங்களது முதல் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொண்டது. லக்னோ மைதானத்தில் ஆடப்பட்ட போட்டி என்பதால் லோ ஸ்கோரிங் ஆட்டமாக இருக்கும் என்று பார்க்கப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் லக்னோ அணி 194 ரன்கள் இலக்கை டெல்லி அணிக்கு நிர்ணயித்தது. இதற்கு லக்னோ அணியின் கைல் மேயர்ஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் அதிரடியே காரணமாக அமைந்தது.
அவர்களை பாராட்டும் வகையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லரில் விக்ரம், தனது நண்பரான கார்த்தியை "வானர் பரம்பரை சுத்த வீர பரம்பரை" என்று பாராட்டுவார். அதே வசனத்தை "வெஸ்ட் இண்டீஸ் பரம்பரை ஒரு வீர ஹார்ட் ஹிட்டிங் பரம்பரை என்று நிரூபித்துவீட்டீர்கள்" என்று மேயர்ஸ் மற்றும் பூரன் புகைப்படத்தை இணைத்து விக்ரம் கூறுவது போல் உருவாக்கப்பட்ட மீம் தெறியாக வலம் வந்துகொண்டிருக்கிறது.

அதேபோல் லக்னோ அணியின் கைல் மேயர்ஸ் ஆட்டத்தின் தொடக்கத்தில் கொடுத்த எளிய கேட்ச்சை கலீல் அஹ்மத் பிடிக்காமல் தவறவிட்டார். இதனை பயன்படுத்திக் கொண்டு, 38 பந்துகளில் 73 ரன்களை கைல் மேயர்ஸ் விளாசிவிடுவார். இதனை குறிப்பிடும் வகையில், மரியான் படத்தில் ஆப்பிரிக்க தீவிரவாதிகளிடம் சிக்கிக் கொண்டு தனுஷ், "முடிஞ்சா இப்பவே கொன்னுடு.. இல்ல பின்னாடி ரொம்ப கஷ்டப்படுவீங்க" என்று மாஸாக ஒரு வசனத்தை பேசி இருப்பார். அதனை அப்படியே கைல் மேயர்ஸ்-க்கு பொறுத்தியுள்ள மீமில், "நான் சான்ஸ் கொடுக்கும் போதே என்ன முடிச்சு விட்ருங்க.. இல்லனா அப்றம் ரொம்ப அவஸ்த படுவீங்க" என்று உருவாக்கப்பட்ட மீம் ஒரு மாஸ் ஃபீல்.

அதேபோல் விபத்தில் அடைந்த காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் உள்ள டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்-ஐ நினைவு கூறும் வகையில், அவரது ஜெர்சி டெல்லி அணியின் டக் அவுட்டில் வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள், மாற்றான் படத்தில் தன்னோடு இணைந்து பிறந்த கொலை செய்யப்பட்ட சூர்யாவை நினைத்து மற்றொரு சூர்யா ஃபீல் செய்வது போல் ரிஷப் பண்ட் ரசிகர்கள் ஃபீல் செய்வதாக உருவாக்கப்பட்ட மீன் செண்டிமெண்டல் டச்.

நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் டெல்லி அணியின் பயிற்சியாளர் குழுவில் ரிக்கி பாண்டிங் மற்றும் சவுரவ் கங்குலி இணைந்து பணியாற்றினர். இருவரும் அருகருகே அமர்ந்து பேசும் புகைப்படத்தை வைத்து, ஆர்ஆர்ஆர் படத்தில் சிறுவனை காப்பாற்ற இணையும் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைவார்கள். அதேபோல் டெல்லி அணியை காப்பாற்ற கங்குலி மற்றும் பாண்டிங் இணைந்துள்ளதாக உருவாக்கப்பட்ட மீம் நாஸ்டால்ஜியா ஃபீல்.

சென்னை அணியை குஜராத்தும், டெல்லி அணியை லக்னோ அடுத்தடுத்த நாட்களில் வீழ்த்தியுள்ளன. 15 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரின் முக்கிய அங்கமாக உள்ள அணிகளை கடந்த ஆண்டு அறிமுகமான இரு அணிகளும் டாமினேட் செய்து வெற்றிபெற்றுருக்கிறது. இதனை குறிப்பிடும் வகையில், சிலம்பாட்டம் படத்தில் சிம்பு பேசும், "இனி எங்க ஆட்டம் தான்" என்ற வசனத்தை அப்படியே இரு அணிகளுக்கும் பொருத்தி "இனிமே இது எங்க காலம்" என்று பேசுவது போல் உருவாக்கப்பட்ட மீம் பரவலாக கவனம் பெற்றுள்ளது.