பிரவீஸ் தொடர்ந்து 4 சிக்சர்.. சூர்யகுமார் இறுதியில் பினிஷிங்.. இருந்தும் மும்பைக்கு 5வது தோல்வி
புனே: ஐபிஎல் தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை அணி பஞ்சாப் அணியுடன் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன் மூலம் மும்பை அணி விளையாடிய 5 போட்டியிலும் தொடர்ந்து தோல்வியை தழுவி கடைசி இடத்தில் உள்ளது.
டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இன்றைய ஆட்டத்தில் மும்பை 3 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே பயன்படுத்தியது.

மும்பைக்கு நெருக்கடி
பஞ்சாப் அணி தொடக்க வீரர் மாயங் அகர்வாலும், ஷிகர் தவானும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். மாயங் அகர்வால் 32 பந்துகளில் 52 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 97 ரன்களை சேர்த்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாரிஸ்டோ 12 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடி வீரர் லிவிங்ஸ்டோனை அதிரடி யாக்கர் மூலம் கிளின் போல்ட் ஆக்கினார் பும்ரா.இதனால் பஞ்சாப் அணி சற்று தடுமாறியது.

199 ரன்கள் இலக்கு
எனினும் ஷிகர் தவான் 45வது ஐபிஎல் அரைசதத்தை பூர்த்தி செய்ததோடு மட்டுமல்லாமல் 50 பந்துகளில் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய ஜித்தேஷ் சர்மா அதிரடியை காட்டினார். உனாட்கட் வீசிய ஓரே ஓவரில் 20 ரன்களுக்கு மேல் பறந்தது. ஷாரக்கானும் 2 சிக்சர்களை பறக்கவிட பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.

இளம் ஜோடி
இதனையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இஷான் கிஷன் 3 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 28 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து களத்தில் ஜோடி சேர்ந்த பிரவீஸ், திலக் வர்மா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தனர்.

பிரவிஸ் அபாரம்
குறிப்பாக ராகுல் சாஹர் வீசிய 9வது ஓவரில் பிரவீஸ் தொடர்ந்து 4 சிக்சர், ஒரு பவுண்டரி விளாச , மும்பை அணி 29 ரன்கள் குவித்தது. 25 பந்துகளில் 49 ரன்கள் எடுத்த நிலையில் பிரவீஸ் பெவிலியன் திரும்பினார். திலக் வர்மா 20 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொலார்ட் 10 ரன் மட்டுமே எடுத்தார்.
Recommended Video

மும்பை ஏமாற்றம்
இதனால் இறுதியில் சூர்யகுமார் தனி ஆளாக நின்று போராடினார். 4 சிக்சர்களை பறக்கவிட்ட அவர் 30 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். எனினும் ரபாடா வீசிய 19வதுஓவரில் அவர் ஆட்டமிழக்க 6 ரன்கள் மட்டுமே மும்பை அணியால் அடிக்க முடிந்தது . கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட முதல் பந்தில் உனாட்கட் சிக்சர் அடித்தார். இதனால் ஆட்டத்தில் டிவிஸ்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் மும்பை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க186 ரன்கள் மட்டுமே மும்பை அடித்தது. மும்பை அணியின் கடைசி ஓவரை பார்க்காமல் ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேறிய சம்பவம் நடந்தது.


Click it and Unblock the Notifications