Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MI vs RCB: டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா.. ஆர்சிபி அணியின் ஹேசல்வுட் நீக்கம்.. உள்ளே வந்த புதிய பவுலர்

மும்பை: 2026 ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

டாஸ் வென்ற பிறகு பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, "இந்த ஆடுகளம் மிகவும் சிறப்பாக உள்ளது. வான்கடே மைதானத்தில் எப்போதுமே இரண்டாவது பேட்டிங் செய்வது சாதகமாக இருக்கும். இன்று ஒரு பெரிய போட்டி என்பதால், மைதானத்திற்கு வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விளையாட்டை ரசிக்க வேண்டும் என்பதே எங்கள் திட்டம். பந்துவீச்சாளர்கள் சரியான இடத்தில் பந்தை வீசுவதும், பேட்ஸ்மேன்கள் சரியான ஷாட்களை ஆடுவதும் தான் போட்டியில் நம்மைத் தக்கவைக்கும். எந்த இலக்கை நோக்கி விளையாடப் போகிறோம் என்பது முன்பே தெரிவது கூடுதல் பலம்" என்றார். மும்பை அணியில் மிட்செல் சான்ட்னர் மற்றும் மயங்க் மார்க்கண்டே சேர்க்கப்பட்டுள்ளனர். கசன்ஃபர் மற்றும் ராகுல் சாஹர் அணியில் இடம் பெறவில்லை.

MI vs RCB IPL 2026 Hardik Pandya Wins Toss and Elects to Field at Wankhede Jacob Duffy Debuts for RCB

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் கூறுகையில், "நானும் முதலில் பந்துவீசவே நினைத்தேன். ஆனால் டாஸ் முடிவு ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை. கடந்த போட்டியில் 200 ரன்கள் எடுத்தது உட்பட பல நேர்மறையான விஷயங்கள் எங்களிடம் உள்ளன. மும்பை ரசிகர்களின் பலத்த ஆதரவுக்கு மத்தியில் விளையாடுவது சவாலானது என்றாலும், இது ஒரு நல்ல வாய்ப்பு" எனத் தெரிவித்தார். பெங்களூரு அணியில் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக ஜேக்கப் டபி அறிமுகமாகிறார்.

மும்பை வான்கடே மைதானத்தின் தன்மை குறித்துச் சுனில் கவாஸ்கர் கூறுகையில், ஆடுகளத்தில் ஓரளவுக்குப் புற்கள் காணப்படுவதால் வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் பந்து ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆக உதவும். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்குப் பெரிய அளவில் பந்து திரும்பாது. 200-க்கும் மேல் ரன் எடுத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம். ஒருவேளை முதலில் பேட்டிங் செய்யும் அணி 220 ரன்கள் எடுத்தால் 80 சதவீதம் வெற்றி உறுதி எனத் தெரிவித்தார். பவுண்டரி எல்லைகள் 61 மற்றும் 67 மீட்டர் என்ற அளவில் சிறியதாக இருப்பதால் சிக்சர் மழைக்கு பஞ்சமிருக்காது.

மும்பை இந்தியன்ஸ் அணி: ரோஹித் சர்மா, ரியான் ரிக்கில்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நமன் திர், மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், டிரென்ட் போல்ட், மயங்க் மார்க்கண்டே, ஜஸ்ப்ரீத் பும்ரா.

மும்பை இந்தியன்ஸ் இம்பாக்ட் வீரர்கள்: ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், கார்பின் போஷ், அஷ்வனி குமார், ரகு ஷர்மா, ராஜ் பாவா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி: பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், டிம் டேவிட், ஜித்தேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட், குருணல் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜேக்கப் டபி, சுயாஷ் சர்மா.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இம்பாக்ட் வீரர்கள்: ரசிக் சலாம் தார், வெங்கடேஷ் ஐயர், ஜேக்கப் பெத்தேல், ஸ்வப்னில் சிங், மங்கேஷ் யாதவ்

Story first published: Sunday, April 12, 2026, 19:17 [IST]
Other articles published on Apr 12, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+