Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபி அடித்த அடி.. ஆடிப் போன மும்பை இந்தியன்ஸ் கூடாரம்.. வான்கடேவில் மெகா ஸ்கோர் குவிப்பு

மும்பை: ஐபிஎல் 2026 தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரன் மழை பொழிந்து மிரட்டியது. பிலிப் சால்ட் மற்றும் கேப்டன் ரஜத் படிதாரின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 240 ரன்களைக் குவித்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆனால் அவரது முடிவைத் தவிடுபொடியாக்கும் வகையில் ஆர்சிபி தொடக்க வீரர்கள் ஆடினர்.

தொடக்க வீரர் பிலிப் சால்ட் ஆரம்பம் முதலே மும்பை பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவர் வெறும் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்களுடன் 78 ரன்கள் குவித்து மிரட்டினார். மறுபுறம் விராட் கோலி தனது நிதானமான அதிரடியைக் காட்டினார். அவர் 38 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்துச் சிறப்பான அடித்தளம் அமைத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்து மும்பை அணியைத் திணறடித்தது.\

MI vs RCB Phil Salt Rajat Patidar Virat Kohli Dismantle Mumbai Bowling to Set a Mammoth 241-Run Target

சால்ட் ஆட்டமிழந்த பிறகு வந்த கேப்டன் ரஜத் படிதார், மைதானத்தையே அதிர வைத்தார். வான்கடே மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சிக்சர்களைப் பறக்கவிட்ட அவர், வெறும் 20 பந்துகளில் 53 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 265 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய டிம் டேவிட் 16 பந்துகளில் 34 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.

மும்பை தரப்பில் ஜஸ்ப்ரீத் பும்ரா மட்டுமே 4 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து விக்கெட் ஏதும் எடுக்காமல் ஓரளவுக்குக் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். ஆனால் அவருக்கு மற்ற பந்துவீச்சாளர்களிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. மயங்க் மார்க்கண்டே வீசிய 2 ஓவர்களில் 40 ரன்களும், ஷர்துல் தாக்கூர் வீசிய 2 ஓவர்களில் 32 ரன்களும் எடுக்கப்பட்டன. ஹர்திக் பாண்டியா, டிரென்ட் போல்ட், மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Story first published: Sunday, April 12, 2026, 21:43 [IST]
Other articles published on Apr 12, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+