For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025: சரித்திரம் படைத்த விராட் கோலி.. பிரம்மாண்ட மைல்கல் சாதனை.. டி20 போட்டிகளில் 13000 ரன்கள்

மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடிய விராட் கோலி மாபெரும் டி20 மைல்கல்லை கடந்து வரலாற்று சாதனை நிகழ்த்தி இருக்கிறார். இந்த போட்டியில் விராட் கோலி 42 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தார். அப்போது அவர் 13,000 டி20 ரன்கள் என்ற இமாலய மைல்கல்லை எட்டினார்.

இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை விராட் கோலி செய்தார். மேலும் உலக அளவில் 13,000 டி20 ரன்கள் எடுத்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

MI vs RCB Virat Kohli Creates History First Indian to Reach 13 000 T20 Runs

இந்த மைல்கல்லை விரைவாக எட்டிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில் 381 இன்னிங்ஸ்களில் 13,000 டி20 ரன்களை எட்டியிருந்தார். விராட் கோலி 386 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி இருக்கிறார்.

விரைவாக 13,000 டி20 ரன்களை எட்டிய வீரர்கள் (இன்னிங்ஸ் அடிப்படையில்):

  • கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்) - 381 இன்னிங்ஸ்

  • விராட் கோலி (இந்தியா) - 386 இன்னிங்ஸ்

  • அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கிலாந்து) - 474 இன்னிங்ஸ்

  • சோயிப் மாலிக் (பாகிஸ்தான்) - 487 இன்னிங்ஸ்

  • கீரான் பொல்லார்ட் (வெஸ்ட் இண்டீஸ்) - 594 இன்னிங்ஸ்

விராட் கோலி இதுவரை 433 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதில் 386 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 13,000 ரன்களை எடுத்து இருக்கிறார். மொத்தம் ஒன்பது சதங்கள் மற்றும் 98 அரை சதங்களை அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஐபிஎல் தொடரில் மட்டுமே அவர் 236 போட்டிகளில் விளையாடி 8119 ரன்கள் எடுத்திருக்கிறார். இந்திய அணிக்காக 125 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4108 ரன்கள் சேர்த்து இருக்கிறார்.

இதுவரை ஐந்து பேட்ஸ்மேன்கள் மட்டுமே டி20 கிரிக்கெட்டில் 13,000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளனர். இதில் விராட் கோலி ஐந்தாவது இடத்தை பிடித்து இருக்கிறார். கிறிஸ் கெயில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையை வைத்துள்ளார். தனது 17 ஆண்டு கால வாழ்க்கையில், கெயில் 24 அணிகளுக்காக விளையாடி 463 இன்னிங்ஸ்களில் 14,562 ரன்கள் குவித்துள்ளார்.

அதிக டி20 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் (13,610 ரன்கள்), பாகிஸ்தானின் சோயிப் மாலிக் (13,557 ரன்கள்) மற்றும் வெஸ்ட் இண்டீஸின் கீரான் பொல்லார்ட் (13,537 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Story first published: Monday, April 7, 2025, 21:44 [IST]
Other articles published on Apr 7, 2025
English summary
MI vs RCB: Virat Kohli Creates History, First Indian to Reach 13,000 T20 Runs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+