For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

துவக்கத்துல வர்றவங்க சரியா ஆடலன்னா எப்படி வெற்றி கிடைக்கும்? -பட்லர் ஆதங்கம்

அபுதாபி : ராஜஸ்தான் ராயல்ஸ் -மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தானை வெற்றி கொண்டுள்ளது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரர்கள் 3 ஓவரில் 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அணியை இக்கட்டான நிலைக்கு கொண்டு சென்றனர்.

பட்லர் மட்டுமே 70 ரன்களை 44 பந்துகளில் குவித்து அணியை ஓரளவிற்கு நெருக்கடியிலிருந்து மீட்டார். ஆயினும் அணி தோல்வியையே அடைந்தது.

சொதப்பிய துவக்க வீரர்கள்

சொதப்பிய துவக்க வீரர்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரர்கள் சரியான துவக்கத்தை தராமல் சொற்ப ரன்களிலேயே சுருண்டனர்.

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்

இதையடுத்து களமிறங்கி ஆடிய அணியின் ஜோஸ் பட்லர் மட்டுமே 70 ரன்களை அடித்து அதிரடி காட்டினார். ஆனாலும் அவரது முயற்சி விழலுக்கு இறைத்த நீரைப் போல வீணாக ஆனது. இந்த தோல்வியுடன் அந்த அணி 3 போட்டிகளில் தொடர் தோல்விகளை கண்டுள்ளது.

எவ்வாறு வெற்றியடைய முடியும்?

எவ்வாறு வெற்றியடைய முடியும்?

இந்நிலையில் அணியின் துவக்க வீரர்கள் சரியான துவக்கத்தை தராத காரணத்தாலேயே அணி தோல்வியை அடைந்ததாக ஜோஸ் பட்லர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். டி20 போட்டிகளில் சிறப்பான துவக்கம் இல்லையென்றால் எவ்வாறு வெற்றியடைய முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சொதப்பிய துவக்க வீரர்கள்

சொதப்பிய துவக்க வீரர்கள்

முதல் 3 ஓவரில் 12 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த தோல்வி முகம் அந்த இன்னிங்ஸ் இறுதிவரை எதிரொலித்தது. பட்லரின் 70 ரன்கள் மட்டும் இல்லையென்றால், அணி தாறுமாறான தோல்வியை அடைந்திருக்கும். இந்த 70 ரன்கள் கைகொடுத்ததால் 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கிடைத்தது.

சிறப்பான சூர்யகுமார்

சிறப்பான சூர்யகுமார்

இதனிடையே மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பான பௌலிங் போட்டதாக பட்லர் பாராட்டு தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்சின் சூர்யகுமார் யாதவும் மிகச்சிறப்பான இன்னிங்சை விளையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார். அவரை வீழ்த்துவதற்கு எடுக்கப்பட்ட எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

Story first published: Wednesday, October 7, 2020, 17:17 [IST]
Other articles published on Oct 7, 2020
English summary
Suryakumar played a very good innings -Butter says
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+