Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாஸ் வென்ற மும்பை.. பவுலிங்கை தேர்வு செய்த ஹர்திக் பாண்டியா.. அட்டாக் செய்ய ரெடியான டிராவிஸ் ஹெட்!

மும்பை: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இரு அணிகளின் பிளேயிங் லெவனிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து ஐதராபாத் அணி களமிறங்கியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பாக தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஏப்ரல் 17ஆம் தேதியன்று 300 ரன்கள் அடிக்க வாய்ப்புள்ளது என்று பதிவிட்டிருந்தார். ஏப்ரல் 17ஆம் தேதியன்று மும்பை - ஐதராபாத் அணிகள் விளையாடுவது தெரிய வந்ததால், இந்த போட்டி மீது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

கடந்த போட்டியில் மும்பை மற்றும் ஐதராபாத் ஆடிய போட்டிகளில் அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது. அதேபோல் இந்த போட்டியில் தோல்வியடையும் அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார்.

MI vs SRH Mumbai Captain Hardik Pandya won the toss and Chose to bowl against Hyderabad

இதனைத் தொடர்ந்து மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில்,
நாங்கள் முதலில் பவுலிங் செய்கிறோம். வான்கடே மைதானத்தில் பனிப்பொழிவை கட்டுப்படுத்த முடியாது. நேற்று பயிற்சியின் போதும் அவ்வளவு பனிப்பொழிவு இருந்தது. அதனால் வான்கடே மைதானத்தில் 2வது பேட்டிங் செய்வதே சிறந்த முடிவு. மும்பை அணியில் எந்த மாற்றம் இல்லை. இதுவரை ஆடிய அனைத்து போட்டிகளிலும் எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம்.

மும்பை அணியின் பேட்டிங் வரிசை சூழலுக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படும். எங்கள் அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் ஆதரவாக இருக்கிறோம். பும்ரா மிகச்சிறந்த ஃபிட்னஸ் உடன் இருக்கிறார். அதனால் பும்ராவை பற்றி கவலை கொள்ள தேவையில்லை. அவர் ஃபிட்னஸ் உடன் இல்லையென்றால்,. இங்கு விளையாட வந்திருக்க மாட்டார் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேட் கம்மின்ஸ் பேசுகையில், முதல் பேட்டிங் செய்வதில் எந்த சிக்கலும் இல்லை. வான்கடே சிறந்த பிட்சாக உள்ளது. நங்கள் அணியிலும் எந்த மாற்றமும் இல்லை. அபிஷேக் சர்மா கடந்த போட்டியின் ஹைலைட்ஸை இப்போதும் பார்த்து கொண்டே இருக்கிறார். கடந்த போட்டிக்கும் இந்த போட்டிக்கும் இடையில் நல்ல ஓய்வு கிடைத்துள்ளது.

2 சிறந்த பயிற்சி செஷன் அமைந்தது. சில மைதானங்களில் ரிவர்ஸ் ஸ்விங் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நினைக்கிறேன். குறிப்பாக ஐதராபாத் மைதானத்தில் தாக்கத்தை கொடுக்காது. ஐபிஎல் போட்டிகள் அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் போது ஒவ்வொரு அணியுமே பனிப்பொழிவை சமாளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, April 17, 2025, 19:06 [IST]
Other articles published on Apr 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+