Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளிர் பிரீமியர் லீக் மும்பை அணி சாம்பியன்.. இறுதி போட்டியில் டெல்லி அணி தோல்வி.. முழு விவரம்

மும்பை : மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில மும்பை அணியும், டெல்லி அணியும் பலப்பரீட்சை நடத்தியது. பரபரப்பான இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து டெல்லி அணியில் தொடக்க வீராங்கனையாக செஃபாலி வர்மா, மேக் லானிங் ஜோடி களமிறங்கினர்.

இதில் செஃபாலி வர்மா அதிரடியாக விளையாட நினைத்து ஆட்டமிழந்தார். 4 பந்தில் 11 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

சரிந்த விக்கெட்

சரிந்த விக்கெட்

இதனையடுத்து அலைஸ் கேப்ஸி எதிர்கொண்ட 2வது பந்திலேயே டக் அவுட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேமிமா ட்ரிகியூஸ் 9 ரன்கள் மட்டுமே சேர்த்து ரசிகர்களை ஏமாற்றினார். இதே போன்று மெர்சையின் கேப் 18 ரன்களில் வெளியேற, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக் லானிங் 35 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

கடைசி பார்ட்னர்ஷிப்

கடைசி பார்ட்னர்ஷிப்

இதே போன்று அருந்ததி ரெட்டி டக் அவுட்டாகியும், மின்னு மணி 1 ரன்னிலும், டானியா பாட்டியா டக் அவுட்டும் ஆகியதால் டெல்லி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்தது. இறுதியில் ஷிகா பாண்டே, ராதா யாதவ் தலா 27 ரன்கள் சேர்க்க, டெல்லி அணி 20 ஓவர் முடிவுல் 131 ரன்கள் என்ற கவுரவமான இலக்கை எட்டியது. ஆனால் அது வெற்றி இலக்காக போதவில்லை.

பொறுப்பான ஆட்டம்

பொறுப்பான ஆட்டம்

132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். ஹெய்லி மேத்தீவ்ஸ் 13 ரன்களிலும், யாஷ்திகா பட்டியா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து நாட் சிவியர் மற்றும் ஹர்மன்பிரித் கவுர் ஜோடி இணைந்து பொறுமையாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

மும்பை சாம்பியன்

மும்பை சாம்பியன்

இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 72 ரன்களை சேர்த்த நிலையில் ஹர்மான்பிரித் கவுர் 37 ரன்களில் ரன் அவுட் ஆனார். எனினும் கடைசி வரை அபாரமாக விளையாடிய நாட் சிவியர் 55 பந்துகளில் 60 ரன்கள் சேர்க்க இறுதியில் அமீலா கேர் 8 பந்தில் 14 ரன்கள் அடித்தார். இதனால் முமபை அணி 3 பந்துகள் எஞ்சிய நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகளிர் பிரீமியர் லிக் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

Story first published: Sunday, March 26, 2023, 23:44 [IST]
Other articles published on Mar 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+