அடடே... இந்தியா- பாகிஸ்தான் மேட்சில் இப்படியெல்லாம் "வரலாற்று" ஒற்றுமையா?!
மிர்பூர்: இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டியென்றாலே ஒரு யுத்தம் போலத்தான்.. இந்த டென்ஷனை குறைக்கும் வகையில் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் பற்றிய அட அப்படியா எனும் வகையில் ஆச்சரியப்பட வைக்கும் ஒரு தகவல் வெளியாகி உள்ளன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. வழக்கம் போல கடைசி ஓவரில் செம டென்ஷன்.. ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியது.
இந்த போட்டியில் நிகழ்ந்த பல சம்பவங்கள் அதாவது டாஸ் வென்றது முதல் கடைசியாக சிக்சர் அடித்து ஜெயிப்பது வரை அச்சு அசலாகவே அப்படியே 1986ஆம் ஆண்டு நடந்த இந்தியா- பாகிஸ்தான் போட்டியிலும் நடந்திருக்கிறது என்றால் நம்பத்தான் முடியுமா?

மைதானம்..
இரண்டு போட்டிகளுமே இரண்டு நாடுகளுக்கு பொதுவான மைதானத்தில்தான் நடைபெற்றது. 1986ஆம் ஆண்டு சார்ஜாவில் நடைபெற்றது. தற்போது வங்கதேசத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்றது..
இரண்டு போட்டிகளிலுமே பாகிஸ்தானே டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.

245தான் இந்தியா ஸ்கோர்
இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணியின் ஸ்கோர் 245தான்.

தொடக்க சிக்சர்கள்
இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணியின் தொடக்க வீரர்கள் 2 சிக்சர்களை அடித்தனர். 1986ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் 2 சிக்சர் அடித்தார். தற்போது ரோஹித் சர்மா 2 சிக்சர்களை விளாசினார்.

மூன்று இந்திய வீரர்கள் அரைசதம்
இரண்டு போட்டிகளிலுமே 3 இந்தியர்கள் அரைசதங்களைக் கடந்து இருக்கின்றனர். அப்போது ஸ்ரீகாந்த், கவாஸ்கர், வெங்சர்க்கார் அரைசதமடித்தனர். தற்போது ராயுடு, ரோஹித் சர்மா, ஜடேஜா அரைசதமடித்தனர்.

2 ரன் அவுட்.
இரண்டு போட்டிகளிலுமே பாகிஸ்தான் தரப்பு 2 ரன் அவுட் ஆனது.

தலா 3 விக்கெட்
இரண்டு போட்டிகளிலுமே கடைசி ஓவர்களை வீசிய சேத்தன் சர்மாவும் அஸ்வினும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சிக்சரில் முடிந்த போட்டி
இரண்டு போட்டிகளுமே சிக்சரில்தான் முடிவடைந்தன. அப்போது சிக்சர் அடித்தது மியான்தத். இப்போது அப்ரிடி.

ஒரு விக்கெட் வித்தியாச வெற்றி
1986ஆம் ஆண்டைப் போலவே தற்போதும் ஒரு விக்கெட் வித்தியாசத்திலேயெ இந்தியாவை வீழ்த்தியுள்ளது பாகிஸ்தான்..
என்ன ஆச்சரியம்..


Click it and Unblock the Notifications