
தோனியின் மந்தம்
அதன்பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் தோனியின் ஆட்டம் மந்த ரகம் தான். 338 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 45 ஓவரில் 267 ரன்கள் அடித்திருந்தது. கடைசி 5 ஓவர்களில் தோனியும், கேதரும் இணைந்து எடுத்த ரன்கள் வெறும் 39.

கடும் நெருக்கடி
இங்கிலாந்து பவுலர்கள் ஸ்லோ பாலாக வீசி, தோனிக்கும், கேதருக்கும் கடும் நெருக்கடி கொடுத்தனர். ஆடுகளமும் மந்தமாகிவிட்டாலும், பெரிய ஷாட்டுக்கு தோனியும் கேதரும் முயற்சிக்கவே இல்லை. அதுவும் பெரும் விமர்சனத்தை முன் வைத்தது.

கிளார்க் ஆதரவு
இந்நிலையில், தோனியின் ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கருத்து கூறியுள்ளார். அவர் தோனிக்கு ஆதரவாக உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: தோனியை மக்கள் சந்தேகப்படக்கூடாது. அவர் ஒரு சிறந்த வீரர்.

தோனி மீண்டெழுவார்
இந்திய அணிக்கு தோனி மிக மிக அவசியம். எனவே அவர் அணிக்கு தேவைப்படும் வரை அவரை பாதுகாத்து வைக்க வேண்டும். அரையிறுதியிலோ, இறுதி போட்டியிலோ முக்கியமான நேரத்தில் தோனி மீண்டெழுவார் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











