Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் கிளார்க் தோல் புற்றுநோயால் பாதிப்பு.. ரசிகர்களுக்கு உருக்கமான கோரிக்கை

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிரபல வீரருமான மைக்கேல் கிளார்க் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற மைக்கேல் கிளார்க் சமூக வலைத்தளத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில்," ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தோல் புற்று நோய் என்பது உண்மையான ஒன்று. இன்று எனது மூக்கில் இருந்த கேன்சரை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கி இருக்கிறார்கள். நான் அனைவருக்கும் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்."

Michael Clarke Skin cancer

"உங்களுடைய தோல்களையும் நீங்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். என்னுடைய விஷயத்தில் வருவதற்கு முன்பே காத்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்ததாக உள்ளது. நான் தொடர்ந்து சிகிச்சைகள் எடுத்து வருகின்றேன். ஆரம்பத்திலே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கின்றது."

"என்னுடைய மருத்துவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்கள் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த அகற்றி விட்டார்கள்" என்று கிளார்க் கூறியுள்ளார். மைக்கேல் கிளார்க்கிற்கு 2006 ஆம் ஆண்டு தோல் புற்றுநோய் இருந்தது. அப்போது அவர் சிகிச்சை எடுத்து அதிலிருந்து மீண்டு வந்தார். 2019 ஆம் ஆண்டு மைக்கேல் கிளார்க், கேன்சர் இல்லாத மூன்று தோல் மச்சங்கள் உருவாகின.

அப்போது அவர் வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ரசிகர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். இது குறித்து ஏற்கனவே பேசி உள்ள அவர், "இன்னொரு நாள் இன்னொரு கேன்சர் கட்டி என் முகத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. இளைஞர்கள் வெளியே செல்லும்போது சூரியனிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்."

"நான் ஒரு தந்தையாக இருக்கின்றேன். நான் வேறு எங்கேயும் செல்ல விரும்பவில்லை. என்னுடைய உலகமே தற்போது என்னுடைய ஏழு வயது மகள் தான் அவருக்காக நான் இருக்க வேண்டும். நான் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அவருக்கு விளங்க வேண்டும். இதற்காக நான் எங்கே செல்கிறேனோ, வெயிலில் படாமல் இருக்க அனைத்து நடவடிக்களையும் எடுப்பேன்.ஒரு தந்தையாக நான் இதை சரியாக செய்வேன்" என்று கூறியுள்ளார்.

44 வயதான மைக்கேல் கிளார்க், 115 டெஸ்ட் போட்டியில் விளையாடி 8643 ரன்கள் அடித்திருக்கின்றார்.இதில் 28 சதம் அடங்கும். இதேபோன்று 245 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 7981 ரன்கள் அடித்துள்ளார். 34 டி20 போட்டிகளிலும் ரசிகர்களால் அழைக்கப்படும் கிளார்க், 2015 ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்று ஆஸ்திரேலிய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார். 2015 ஆஷஸ் தொடருக்கு பிறகு கிளார்க் ஓய்வெடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, August 27, 2025, 13:04 [IST]
Other articles published on Aug 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+